ரஜினி ரசிகர்களே இனி அவரை நம்பமாட்டார்கள்.....! பிரபல பத்திரிக்கையாளர்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
ரஜினி இனிமேலும் அரசியலுக்கு வரப்போவதாகச் சொன்னால், அவரது ரசிகர்களே அவரை நம்ப மாட்டார்கள் என பிரபல பத்திரிக்கையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.
தனது செல்வாக்கு சரிந்துள்ளதால், அதை சீர்த்திருத்தும் நோக்கில் ரஜினிகாந்த் செயல்பட்டு வருகிறார். உடல்நலத்தை கருத்தில் கொண்டுதான், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்தார். இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி "இனிமேல் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்றும், அதனால் மக்கள் மன்றத்தை கலைப்பதாகவும் கூறினார்.
அண்மையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது அவர் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது, "அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்த பின் மக்கள் மன்றத்தின் நிலை குறித்து, ரசிகர்களுக்கு விளக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதால் தான் மக்கள் மன்றத்தை உருவாக்கினோம். இதன் மூலமாகத்தான் பலருக்கு பதவிகளும் வழங்கப்பட்டது. காலச்சூழ்நிலை காரணமாக நினைத்தது நடக்காமல் போய்விட்டது, இதனால் இனி வரும்காலங்களிலும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை" என திட்டவட்டமாக கூறப்பட்டிருந்தது. சார்பு அணிகள் எதுவும் இல்லாமல், ரஜினி மக்கள் மன்றம் இனி ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாகவே செயல்படும் என அவர் சார்பில் கூறப்பட்டிருந்தது.
நடிகர் ரஜினியின் இந்த முடிவை கருத்தில் வைத்துதான் பிரபல பத்திரிக்கையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ், "ரஜினி இனிமேலும் அரசியலுக்கு வரப்போவதாகச் சொன்னால், அவரது ரசிகர்களே அவரை நம்ப மாட்டார்கள் " என்று விமர்சனம் செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments