ரஜினி ரசிகர்களே இனி அவரை நம்பமாட்டார்கள்.....! பிரபல பத்திரிக்கையாளர்....!

ரஜினி இனிமேலும் அரசியலுக்கு வரப்போவதாகச் சொன்னால், அவரது ரசிகர்களே அவரை நம்ப மாட்டார்கள் என பிரபல பத்திரிக்கையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.

தனது செல்வாக்கு சரிந்துள்ளதால், அதை சீர்த்திருத்தும் நோக்கில் ரஜினிகாந்த் செயல்பட்டு வருகிறார். உடல்நலத்தை கருத்தில் கொண்டுதான், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்தார். இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி இனிமேல் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்றும், அதனால் மக்கள் மன்றத்தை கலைப்பதாகவும் கூறினார்.

அண்மையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது அவர் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது, அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்த பின் மக்கள் மன்றத்தின் நிலை குறித்து, ரசிகர்களுக்கு விளக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதால் தான் மக்கள் மன்றத்தை உருவாக்கினோம். இதன் மூலமாகத்தான் பலருக்கு பதவிகளும் வழங்கப்பட்டது. காலச்சூழ்நிலை காரணமாக நினைத்தது நடக்காமல் போய்விட்டது, இதனால் இனி வரும்காலங்களிலும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என திட்டவட்டமாக கூறப்பட்டிருந்தது. சார்பு அணிகள் எதுவும் இல்லாமல், ரஜினி மக்கள் மன்றம் இனி ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாகவே செயல்படும் என அவர் சார்பில் கூறப்பட்டிருந்தது.

நடிகர் ரஜினியின் இந்த முடிவை கருத்தில் வைத்துதான் பிரபல பத்திரிக்கையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ், ரஜினி இனிமேலும் அரசியலுக்கு வரப்போவதாகச் சொன்னால், அவரது ரசிகர்களே அவரை நம்ப மாட்டார்கள் என்று விமர்சனம் செய்துள்ளார்.
 

More News

நீட் தேர்வு எப்போது? தேதியை அறிவித்த மத்திய கல்வி அமைச்சர்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மற்றும் அனைத்து மாநிலங்களிலும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் நீட் தேர்வும் ரத்து செய்யப்பட வேண்டும்

சைக்கிளுக்கு மாறிய த்ரிஷா: பெட்ரோல் விலை உயர்வு காரணமா?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா கடந்த 1999ஆம் ஆண்டு 'ஜோடி' என்ற திரைப்படத்தின் மூலம் சிறு கேரக்டரில் அறிமுகமாகி அதன் பின் 2002ஆம் ஆண்டு 'மௌனம் பேசியதே'

சிங்கிளா நீங்க? கவலையை விடுங்க… காதலில் வெல்ல அச்சத்தலான 5 டிப்ஸ்!

ஆதாம், ஏவாள் காலத்தில் இருந்தே பெண்களை புரிந்துகொள்ள வேண்டும் என்று ஆண்கள் மெனக்கெடத்தான் செய்கின்றனர்.

போனின் தகாத உறவு....! மதுபோதை.....! கோவையில் குளவிக்கல்லால் கொலை...!

மகள் பலரிடம் தகாத உறவு வைத்திருந்த காரணத்தால், தாயே தலையில் குளவிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடற்கரையில் துள்ளல் ஆட்டம், கிளாமர் போட்டோஷூட்: கலக்கும் 'பீஸ்ட்' நாயகி!

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் நாயகி பூஜா ஹெக்டே சமூகவலைதளங்களில் பிரபலமானவர் என்பதும் குறிப்பாக அவரது இன்ஸ்டாகிராமில் சுமார் 15 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளார்கள்