நல்லா இருக்கு ஆஷ்… கோலியின் தமிழை பார்த்து வாயை பிளந்த இன்னொரு வீரர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று இருப்பதால் இந்திய வீரர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியக் கேப்டன் விராட் கோலி தமிழில் பேசி இருப்பதும் ரசிகர்களுக்கு கடும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்கிஸில் இன்று இந்திய அணி வீரர்கள் பவுலிங் செய்து வந்தனர். அதிக ரன் இலக்குடன் ஆடிவந்த இங்கிலாந்து அணி வீரர்கள் 4 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்களோடு விளையாடி வந்தனர். அந்நிலையில் இந்திய வீரர் அஸ்வின் தனது ஸ்பின் பவுலிங்கால் இங்கிலாந்து வீரர்களை அசர வைத்து கொண்டு இருந்தார். அப்போது அஸ்வினின் பந்தை எதிர்க்கொள்ள முடியாத லாரன்ஸ் முதலில் அவுட்டார்.
அதைத் தொடர்ந்து அதேபோன்ற பந்து வீச்சை அடுத்து வந்த ஸ்டோக்ஸிடமும் அஸ்வின் பயன்படுத்தினார். இதனால் உறுதியாக ஸ்டோக்ஸும் அவுட்டார் என கிரவுண்டில் இருந்த ரசிகர்கள் ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். இந்த ஆரவாரம் கேப்டன் கோலியிடமும் இருந்திருக்கும் போல. இதனால் உற்சாகம் அடைந்த கோலி, திடீரென அஸ்வினைப் பார்த்து “நல்லா இருக்கு ஆஷ்“ என உற்சாகத்தில் கூறினார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத மயங்க் அகர்வால் அருகில் இருந்த கோலியை பார்த்து ஆச்சர்யம் அடைந்தார்.
ஏற்கனவே தமிழக வீரர்களாக வாஷிங்டன் சுந்தர், நடராஜன், அஸ்வினைத் தவிர இந்தியக் கிரிக்கெட் அணியில் மயங்க் அகர்வால், ராகுல், ஷமி, விஹாரி போன்றோருக்குத் தமிழ் புரியும் என்பதும் அவ்வபோது இவர்கள் பேசும் தமிழ் வார்த்தைகள் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் முதன் முதலாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அஸ்வினைப் பார்த்து “நல்லா இருக்கு“ எனப் பேசி இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments