கேப்டன் பதவியைத் துறந்த கோலி குறித்து மனைவி அனுஷ்கா ஷர்மா நெகிழ்ச்சி கடிதம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியக் கிரிக்கெட் அணியில் ஆக்ரோஷமான கேப்டனாக வலம்வந்த விராட் கோலி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடருக்குப் பிறகு தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்குமுன்பு கடந்த வருடம் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து திடீரென்று விலகினார். இதையடுத்து பிசிசிஐ ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் கேப்டன்சி பதவியில் இருந்தும் அவரை நீக்கியது.
இந்திய அணியன் 3 கிரிக்கெட் வடிவங்களில் இருந்தும் கோலி விலகியுள்ளார். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் விராட் கோலியின் ராஜினாமா குறித்து அவருடைய மனைவி அனுஷ்கா சர்மா உருக்கமான கடிதத்தை வெளியிட்டு உள்ளார்.
அந்தக் கடிதத்தில், தோனி கேப்டன் பதவியை விட்டு விலகியதால் தாம் கேப்டனாக்கப்பட்டதாகக் கூறிய நாள் இன்னும் நினைவில் இருக்கிறது. நீ நான், தோனி மூவரும் கடந்த 2014இல் அன்றைய தினம் பேசி சிரித்துக் கொண்டிருந்தோம். அன்று உனது தாடியில் எவ்வளவு சீக்கிரம் நரைமுடி வளர்கிறது என்று பார் என்று தோனி பேசி சிரித்துக் கொண்டிருந்தார். அதேபோல உனது தாடியில் நரைமுடி தென்பட்டன. அதை நான் உன் அருகில் இருந்து கண்டேன். அதுமட்டுமல்லாமல் நீ அடைந்த வளர்ச்சியும் உன்னால் அணி வளர்ந்ததையும் நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன்.
இந்த 7 ஆண்டுகளில் இந்திய அணி பல வெற்றிகளை குவித்தது. 2014 ஆம் ஆண்டு நாம் ஒரு குழந்தையின் மனநிலையில் இருந்தோம். நல்ல எண்ணத்துடன் நீ கேப்டன் பொறுப்பை ஏற்றாய்.
களத்தில் மட்டுமல்லாமல், களத்திற்கு வெளியேயும் நீ பல சவால்களை சந்தித்தாய். சவால்கள் நிறைந்தது தானே வாழ்க்கை. எதிர்பாராத சூழ்நிலைகள் நம்மை மிகவும் சோதிக்கும். ஆனால் உன் நல்ல மனதால் களத்தில் முழு சக்தியையும் வெளிப்படுத்தி வெற்றி கண்டாய். சில தோல்விகளில் கண்ணீருடன் இன்னும் என்ன செய்து இருக்கலாம் என்று யோசிப்பாய். அதுதான் நீ நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருப்பதுதான் எனக்கும் மற்றவர்களுக்கும் பிடிக்கும்.
இதனால் தான் என் கண்ணுக்கு நீ சிறந்தவனாக தெரிகிறாய். உன் கண்ணில் அழுக்கற்ற நேர்மையும் நல்ல எண்ணங்களும் இருக்கும். நல்ல விசயத்திற்காக என்றும் நீ நின்றாய். போராடினாய். உனக்கு பேராசை கிடையாது. உன் காதல், என் காதல் அளவற்றது. உனது இந்த 7 ஆண்டு பயணம் நமது மகளுக்கு நல்ல பாடமாக இருக்கும். நீ சிறப்பாக நடந்து கொண்டாய் என்று அனுஷ்கா சர்மா தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
அனுஷ்கா சர்மா தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்ட இந்தக் கடிதம் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments