இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனைக்கு விராத் கோஹ்லி செய்த நெகிழ்ச்சியான உதவி!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை ஒருவரின் தாயார் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது சிகிச்சைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நிதி உதவி செய்திருப்பதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை ஷ்ரவந்தி நாயுடு. இவருடைய தாயார் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிகிச்சைக்கு உதவி செய்ய வேண்டுமென ஷ்ரவந்தி ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேசனை தொடர்பு கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த விராட் கோலி உடனடியாக ரூபாய் 6.77 லட்சம் ரூபாய் ஷ்ரவந்தி தாயாரின் சிகிச்சைக்காக அளித்துள்ளார். இது குறித்த தகவலை மற்றொரு கிரிக்கெட் வீராங்கனை தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டதை அடுத்தே விராட் கோலி செய்த உதவி வெளியுலகத்துக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து விராட் கோலிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி மேலும் பலரும் ஷ்ரவந்தியின் தாயார் சிகிச்சைக்கு நிதி உதவி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனா பாதித்தவர்களுக்கு தடுப்பூசி? வெளியான முக்கிய அறிவிப்பு!

கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு 3 மாதம் கழித்து தட

பாம்பு டான்ஸ் ஆடிய இளைஞர்கள்: புதுவகை தண்டனை!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை தொற்று? எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை தொற்று காரணமாக 5 நோயாளிகள்

பிரபல சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா? ரசிகர்கள் ஆச்சரியம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் அவற்றில் ஒன்று 'பாக்கியலட்சுமி' என்பது தெரிந்ததே. இந்த சீரியலில் ஒரு குடும்பத்தில் குடும்பத்தலைவி

நான் நடிச்ச காமெடி இப்ப உலகத்துக்கே பொருந்துதே: கொரோனா குறித்து வடிவேலு

நான் நடித்த காமெடி ஒன்று தற்போது உலகத்துக்கே பொருந்தி வருவதாக நடிகர் வடிவேலு பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.