விஜய்யின் 'மெர்சலுக்கு' போட்டியாகும் பிரபல நடிகரின் படம்

  • IndiaGlitz, [Friday,September 29 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாவது உறுதியாகிவிட்ட நிலையில் இதே தினத்தில் இன்னொரு பிரபல நடிகரான சசிகுமாரின் 'கொடிவீரன்' வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சசிகுமார் நடித்த 'கொடிவீரன்' படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் நாளை வெளியாகவுள்ளது. இதுகுறித்த விளம்பர போஸ்டரில் இந்த படம் தீபாவளி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

சசிகுமார், மஹிமா நம்பியார், சானுஷா, பாலா, பாலசரவனன், பூர்ணா உள்பட மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்தை முத்தையா இயக்கியுள்ளார். என்.ஆர்.ரகுநாதன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு கதிர் ஒளிப்பதிவும், வெங்கட்ராஜன் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை சசிகுமாரின் கம்பெனி புரடொக்சன்ஸ் தயாரித்துள்ளது.

மேலும் மெர்சல், கொடிவீரன் தவிர நயன்தாராவின் 'அறம்' மற்றும் மோகன்லால்-விஷாலின் 'வில்லன்' ஆகிய படங்களும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

பிறந்த நாள் வாழ்த்துக்கள் குஷ்பு

திரைப்பட நடிகை, தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்து வரும் குஷ்பு அவர்களுக்கு IndiaGlitz சார்பில் உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சண்முகப்பாண்டியனின் ஜல்லிக்கட்டுக்கு விரைவில் தேதி குறிப்பு

கேப்டன் விஜயகாந்தின் கலையுலக வாரிசு சண்முகப்பாண்டியன் நடித்து வரும் 'மதுரவீரன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றது

தனுஷின் 'மாரி 2' நாயகி அறிவிப்பு

தனுஷின் வெற்றி படங்களில் ஒன்றான மாரி' படத்தின் இரண்டாம் பாகமான 'மாரி 2' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கவுள்ளது.

ஸ்பைடர்-மெர்சல் வில்லன் ரோல்களின் வித்தியாசம்: எஸ்.ஜே.சூர்யா விளக்கம்

இயக்குனர் மற்றும் ஹீரோவாக இதுவரை கோலிவுட் திரையுலகில் வலம் வந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' படம் மூலம் வில்லனாகி உள்ளார்

அம்மா இட்லி சாப்பிட்டாங்கன்னு ஏன் சொன்னேன் தெரியுமா? சி.ஆர்.சரஸ்வதி

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது 'அம்மா இட்லி சாப்பிடுகிறார்', நலமாக இருக்கின்றார், அரசு பணிகளை மருத்துவமனையில் இருந்தே செய்கிறார்' என்று அதிமுகவினர் பலர் கூறினர்.