close
Choose your channels

தனுஷின் 'கொடி' இசை வெளியீட்டின் முக்கிய தகவல்

Tuesday, October 4, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த 'கொடி' திரைப்படத்தின் இசை வெளியீடு நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்த விழா எங்கு நடைபெறும் என்று தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் விழா ஏதும் இன்றி நேரடியாக கடைகளுக்கும், உரிமை பெற்ற இணையதளங்களிலும் கிடைக்கும் என்ற தகவல் வந்துள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள 'கொடி' படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த படத்தின் பாடல்களை சித்ரா, அருண்ராஜா காமராஜ், தனுஷ், ஸ்வேதா மோகன், ஷங்கர் மகாதேவன் ஆகியோர் பாடியுள்ளனர்.
இந்த படத்தின் டிராக் லிஸ்ட் பின்வருமாறு:
1. கொடி பறக்குதா என்ற பாடலை தனுஷ், அருண்ராஜா காமராஜ் பாடியுள்ளனர்.
2. சுழலி என்ற பாடலை விஜய் நரேன் பாடியுள்ளார்
3. ஆரிராரோ என்ற பாடலை சின்னக்குயில் சித்ரா பாடியுள்ளார்.
4. சிறுக்கி வாசம் என்ற பாடலை ஆனந்த் அரவிந்தகிஷான், ஸ்வேதா மோகன் பாடியுள்லனர்
5. வேட்டு போட்டு என்ற பாடலை ஷங்கர் மகாதேவன் பாடியுள்ளார்.
இந்த படத்தின் நான்கு பாடல்களை கவிஞர் விவேக் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment