"கொடநாடு எஸ்டேட் என்னுடையது".. வருமான வரித்துறையிடம் தெரிவித்த சசிகலா.
Send us your feedback to audioarticles@vaarta.com
கொடநாடு எஸ்டேட்டுக்கு தாமே உரிமையாளர் என்று வருமான வரித்துறையிடம் சசிகலா தெரிவித்துள்ளார்.
ஆயிரத்து 900 கோடி ரூபாய் அளவுக்கு பணமதிப்பிழப்பு நோட்டுகளை பயன்படுத்தி சொத்து வாங்கியது மற்றும் கடன் கொடுத்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு, பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.இதற்கு சசிகலா சார்பில் அவரது ஆடிட்டர் தாக்கல் செய்துள்ள பதிலில், ஆயிரத்து 900 கோடி ரூபாய் பண மதிப்பிழப்பு நோட்டு பற்றியும், அதை பயன்படுத்தி வாங்கிய சொத்துக்கள் குறித்தும் எந்த தகவலும் தெரியாது என்று கூறப்பட்டுள்ளது.
நமது எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயா பிரிண்டர்ஸ் ஆகிய நிறுவனங்களில் முதலீடு இருப்பதாகவும், ஜெயலலிதாவுக்கு சொந்தமானதாக கூறப்படும் ஜெயா பார்ம் ஹவுஸ், ஜெ.எஸ். ஹவுசிங் டெவலப்மெண்ட், ஜெய் ரியல் எஸ்டேட், கிரீன் பார்ம் ஹவுஸ் ஆகியவற்றில் சசிகலா பங்குதாரர் என்றும், ஜெயலலிதாவுக்கு சொந்தமானதாக கூறப்படும் கொடநாடு எஸ்டேட் மற்றும் 4 சொத்துக்களில் 2016 ஏப்ரல் 1-ல் இருந்து ஜெயலலிதா மரணம் அடைந்த 2016 டிசம்பர் 5-ந் தேதி வரை பங்குதாரராக இருந்ததாகவும், ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு பங்குதாரர் நிறுவனம் கலைக்கப்பட்டு அதன் உரிமையாளராக சசிகலா இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இது மட்டுமல்லாமல் இந்தோ தோகா கெமிக்கல், பார்மசூட்டிக்கல் லிமிடெட், ஆஞ்சநேயா பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றில் சசிகலா டைரக்டராக இருப்பதாகவும், ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் 41 லட்சத்து 66 ஆயிரம் பங்குகளையும், ஆரே லேண்ட் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் 3 லட்சத்து 60 ஆயிரம் பங்குகளையும், மேவிஸ் சாட்காம் நிறுவனத்தின் 7 லட்சத்து 2 ஆயிரம் பங்குகளையும், ராம்ராஜ் அக்ரோமில்ஸ் நிறுவனத்தின் 36 ஆயிரம் பங்குகளையும் சசிகலா வைத்திருப்பதாகவும் வருமான வரித்துறையிடம் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Sai Surya
Contact at support@indiaglitz.com
Comments