ராயபுரம், திருவிக நகரை முந்தியது கோடம்பாக்கம்: மண்டலவாரியாக கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் நேற்று வரை 5409 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அதில் சென்னையில் மட்டும் 2644 பேர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சென்னையில் ராயபுரத்தில் தான் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தனர். ஆனால் கடந்த நான்கு நாட்களாக ராயபுரத்தை முந்திக்கொண்டு திருவிக நகரில் அதிக பாதிப்பு இருந்தது.

இந்த நிலையில் நேற்று நிலைமை தலைகீழாகி ராயபுரம், திருவிக நகரை பின்னுக்கு தள்ளிவிட்டு கோடம்பாக்கம் முதலிடத்தை பிடித்துள்ளது. கோடம்பாக்கம் பகுதியில் மட்டும் 461 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து திருவிக நகரில் 448 பேர்களும் ராயபுரத்தில் 422 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தேனாம்பேட்டையில் 316 பேர்களும் அண்ணாநகரில் 206 பேர்களும் தண்டையார்பேட்டையில் 184 பேர்களும், அடையாறு பகுதியில் 107 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மிக குறைவாக மணலியில் 14 பேர்களும், சோழிங்கநல்லூரில் 15 பேர்களும், ஆலந்தூரில் 16 பேர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஒரே நாளில் 150 கோடி வசூல்: டாஸ்மார்க் செய்த உச்சகட்ட சாதனை 

கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள காரணத்தால்  வேலையின்றி, வருமானம் இன்றி பொதுமக்கள் தவித்த நிலையில் அரசு அவர்களுக்காக ஆயிரம் ரூபாய் நிதி

ஊரடங்கால் அதிக கர்ப்பம்: இந்தியாவில் 2.1 கோடி குழந்தைகள் பிறக்க வாய்ப்பு என ஐநா தகவல்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல்கட்ட ஊரடங்கும், ஏப்ரல் 15ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட ஊரடங்கும், அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மே 4ஆம் தேதி முதல்

சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் பலி: தமிழக பலி எண்ணிக்கை 41ஆக உயர்வு

கொரோனா வைரஸால் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மிக அதிகமான பாதிப்பு இருந்தாலும் உயிரிழப்பு மிகவும் குறைவாக இருந்தது ஆறுதலான செய்தியாக இருந்தது.

சொந்த ஊரை நோக்கி நடந்து சென்ற தொழிலாளர்கள் மீது மோதிய ரயில்: 17 பேர் பரிதாப பலி

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த சுமார் இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து, நாடு முழுவதும் எந்த போக்குவரத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளையரை வெளியேற்றிய நமக்கு, கொள்ளையரையும்‌ வெளியேற்றும்‌ காலம்‌ நெருங்கிவிட்டது: கமல்ஹாசன்

உலக நாயகன் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவ்வபோது தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆவேசமான அரசியல் கருத்துக்களை தெரிவித்து வரும்