10 ஆண்டுகளுக்கு பின்னர் 'குணா' குகையை மீண்டும் திறக்க ஏற்பாடு

  • IndiaGlitz, [Monday,November 13 2017]

கடந்த 1992ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த 'குணா' படத்தில் 'கண்மணி அன்போடு' என்ற பாடல் காட்சி இடம்பெற்ற இடத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. கொடைக்கானலில் உள்ள ஆபத்தான குகை ஒன்றில் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இந்த படம் வெளிவந்த பின்னர் இந்த குகை 'குணா குகை' என்று அழைக்கப்பட்டதோடு, கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப்பயணிகள் தவறாமல் பார்க்கும் ஒரு இடமாகவும் மாறியது.

ஆனால் இந்த குகை செல்லும் வழி ஆபத்து நிறைந்ததாக இருந்ததால் ஆபத்தான பள்ளத்தில் விழுந்து பலர் உயிரிழந்தனர். இதன் காரணமாக இந்த குகை பத்தாண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்டது.

இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று இந்த குகைக்கு செல்லும் பாதை சீரமைக்கப்பட்டது. தற்போது மரப்பாலம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் மிக விரைவில் இந்த குகையை பார்க்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவல் கொடைக்கானல் வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இசையரசி பி.சுசீலா பிறந்த நாள் ஸ்பெஷல்.

தென்னிந்திய திரை உலகில் மட்டுமின்றி உலகப் புகழ்பெற்ற, கின்னஸ் சாதனை புரிந்த பின்னணி பாடகி பி.சுசீலா அவர்களுக்கு இன்று பிறந்த நாள்.

சுசீந்திரனின் 'நெஞ்சில் துணிவிருந்தால்' ஓப்பனிங் வசூல் நிலவரம்

இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய 'நெஞ்சில் துணிவிருந்தால்' திரைப்படம் ரிலீசுக்கு முன்னர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.

உதயநிதியின் 'இப்படை வெல்லும்' வசூலிலும் வென்றதா?

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கவுரவ் இயக்கிய 'இப்படை வெல்லும்' திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்

அறம்: ஒரு கோடி ரூபாய் ஓப்பனிங் வசூலை பெற்ற முதல் படம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கலெக்டராக நடித்த 'அறம்' திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி எதிர்பார்த்தைவிட மிகப்பெரிய ஓப்பனிங் வசூலை பெற்றுள்ளது.

ஈரான் - ஈராக் எல்லையில் பயங்கர நிலநடுக்கம்: 67 பேர் பலி

ஈரான் மற்றும் ஈராக் நாடுகளின் எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 67 பேர் பலியாகியுள்ளதாகவும், 500க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.