close
Choose your channels

இசையமைப்பாளர் லியோ ஜேம்ஸின் 'கோ 2' டிராக் லிஸ்ட்

Sunday, September 27, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய விருது பெற்ற பாபிசிம்ஹா நடிக்கும் 'கோ 2' திரைப்படத்தின் இசை வெளியீடு வரும் அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டிராக்லிஸ்ட் வெளியாகியுள்ளது. காஞ்சனா 2' படத்தில் 'சண்டமுனி' மற்றும் வாய்யா வீரா' ஆகிய இரண்டு பாடல்களுக்கு இசையமைத்த இளம் இசையமைப்பாளர் லியோ ஜோன்ஸ் இந்த படத்தில் அனைத்து பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்களை நா.முத்துக்குமார், மதன் கார்க்கி, ஆகியோர் எழுதியுள்ளனர்.

1. கோகிலா என்று தொடங்கும் இந்த முதல் பாடலை மதன்கார்க்கி எழுதியுள்ளார். லியோ ஜேமஸ் மற்றும் நீதிமோகன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

2. விதாதா என்று தொடங்கும் இந்த இரண்டாவது பாடலை நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். பிரபல பாலிவுட் பின்னணி பாடகரான விஷால் தத்லானி மற்றும் லியோ ஜேம்ஸ் இந்த பாடலை பாடியுள்ளனர்.

3. கண்ணம்மா என்று தொடங்கும் மூன்றாவது பாடல் நா.முத்துக்குமார் அவர்களால் எழுதப்பட்டது. இந்த பாடலை இன்னோகங்கா (Inno Genga) மற்றும் சின்மயி ஆகியோர் பாடியுள்ளனர்.

4.உன்னை மாற்றினால் என்று தொடங்கும் இந்த பாடலையும் நா.முத்துக்குமார் அவர்கள் எழுத ஹரிஷ்ஹ் சிவராமகிருஷ்ணன் மற்றும் சார்கம் கோயர் ஆகியோர் பாடியுள்ளனர்.

5. கண்ணம்மா என்று தொடங்கும் இந்த பாடலை பிரபல பாலிவுட் பாடகர் சலீம் மெர்ச்சண்ட் பாடியுள்ளார். இதுதவிர 'திஸ் இஸ் கோ 2' என்ற தீம் மியூசிக்கும் இந்த படத்தின் ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ட்ரெட் குமார் &

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment