பாபிசிம்ஹாவின் 'கோ 2' ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Saturday,March 19 2016]

'ஜிகர்தண்டா' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்ற பாபிசிம்ஹா தற்போது அரைடஜன் படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார். பாபிசிம்ஹா நடிப்பில் ரன், கோ 2, இறைவி, பாம்புச்சட்டை, மெட்ரோ, வல்லவனுக்கு வல்லவன், கவலை வேண்டாம் ஆகிய படங்கள் இவ்வருடம் வெளிவரவுள்ளது.
இந்நிலையில் 'கோ 2' திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என்று இன்று சமூக வலைத்தளங்களிலும், தினசரி நாளிதழ்களிலும் விளம்பரங்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை ஏப்ரல் 29ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே ஏப்ரல் 29ஆம் தேதியில்தான் சூர்யாவின் '24' திரைப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாபிசிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ், பால சரவணன் உள்பட பலர் நடித்துள்ள 'கோ 2' திரைப்படத்தை சரத் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் சக்ரி டோலட்டியிடம் 'உன்னை போல் ஒருவன்' மற்றும் 'பில்லா 2' ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. லியோ ஜேம்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்தை எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
வரும் மே 16ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஏப்ரல் இறுதியில் பாலிட்டிக்கல் த்ரில்லர் படமான 'கோ 2' திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.