எய்ட்ஸ் நோயாளி எனத் தெரிந்தே காதலித்தேன்… டிரைவருடன் சென்ற சிறுமியால் அதிர்ச்சி!
- IndiaGlitz, [Monday,January 25 2021]
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவர் ஆட்டோ டிரைவருடன் காதல் ஏற்பட, தன் பெற்றோரை விட்டுவிட்டு அவருடன் சென்றுள்ளார். இந்நிலையில் மகளைத் தேடிய பெற்றோர் போலீஸ் உதவியை நாடி இருக்கின்றனர். போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் இருவரும் கோவையில் பிடிபட்டு உள்ளனர். பின்னர் சொந்த ஊருக்கு வரவழைக்கப்பட்ட அந்தக் காதல் ஜோடி கூறிய தகவல் போலீசாரை மிரள வைத்து இருக்கிறது.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி நாகர்கோவில் உள்ள ஒரு ஆட்டோ டிரைவரை காதலித்து உள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன் பெற்றோரை விட்டு விட்டு, ஆட்டோ டிரைவருடன் சென்று இருக்கிறார். இதனால் பதறிப்போன பெற்றோர் போலீஸ் உதவியை நாடி இருக்கின்றனர். போலீஸார் இந்தக் காதல் ஜோடியை கோவை மாவட்டத்தில் கண்டுபிடித்து உள்ளனர். பின்னர் குமரிக்கு வரவழைக்கப்பட்ட அந்த ஜோடியிடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது மாணவியை அழைத்து சென்ற 22 வயது ஆட்டோ டிரைவர், தனக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருப்பதாகக் கூறியுள்ளார். அதனால் பதறிப்போன போலீஸ் அதிகாரிகள் ஏன் சிறுமியை அழைத்து சென்றாய் என அந்த இளைஞரின் கேள்வி எழுப்பினர்.
இதைப் பார்த்துக் கொண்டு இருந்த அந்தச் சிறுமி ஏற்கனவே அவருக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருப்பது எனக்குத் தெரியும். தெரிந்தேதான் அவர்மேல் பரிதாபப்பட்டு அவரைக் காதலித்தேன் எனக் கூறி இருக்கிறார். இந்தப் பதிலைக் கேட்ட போலீஸார் மற்றும் சிறுமியின் பெற்றோர் அதிர்ந்து போயுள்ளனர். மேலும் கோவைக்கு சென்ற இந்தக் காதல் ஜோடி நெருக்கமாக இருந்ததாகவும் கூறியுள்ளனர். இதனால் சிறுமியை பெற்றோருடன் அனுப்பாமல் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு அவருக்கு எய்ட்ஸ் நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும் ஆட்டோ டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து உள்ளனர். இந்நிலையில் எய்ட்ஸ் இருப்பது தெரிந்தும் ஆட்டோ டிரைவருடன் சென்ற சிறுமியின் செயலால் குமரி பகுதியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.