கே.எல்.ராகுலுக்கு தொடரும் நெருக்கடி? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது டி20 போட்டியில் கே.எல்.ராகுல் இடம் பெறுவாரா? என நேற்று போட்டித் தொடங்குவதற்கு முன்பு வரை விவாதம் செய்யப்பட்டது. காரணம் அவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ராகுல் டக் அவுட்டானார். அதேபோல இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் கலந்து கொண்ட அவர் ஒரு போட்டியில் டக் அவுட், இன்னொரு போட்டியில் 1 ரன் மட்டுமே எடுத்து இருந்தார். இதனால் 3 ஆவது டி20 போட்டியில் ராகுல் இடம்பெறுவதே கடினம் என விமர்சனம் வைக்கப்பட்டது.
மேலும் கே.எல்.ராகுலுக்கு பதிலாக ரோகித் சர்மா களம் இறக்கப்படுவார் என்பது போன்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டன. நேற்று நடந்த டி20 போட்டியில் சூர்யா யாதவ்வை ஓரம் கட்டிய கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மாவிற்கு வாய்ப்புக் கொடுத்து இருந்தார். இதனால் நேற்றைய போட்டியில் கே.எல்.ராகுல் மிட்டில் வீரராக களம் இறக்கப்படுவார் என கருதப்பட்டது. ஆனால் தொடக்க ஆட்டக்காரரை ஒதுக்கக்கூடாது என்கிற ரீதியில் நேற்று கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராகவே களம் இறங்கினார்.
ஆனால் சொல்லி வைத்தாற்போல நேற்றைய ஆட்டத்திலும் இவர் டக் அவுட்டானார். இதனால் ரசிகர்கள் மட்டும் அல்லாது பல முன்னாள் வீரர்களும் இனி கே.எல்.ராகுல் பார்மிற்கு வருவாரா? என சந்தேகம் எழுப்பி வருகின்றனர். காரணம் 3 டி20 போட்டிகளில் 2 டக் அவுட் மற்றும் ஒரு போட்டியில் ஒரு ரன் மட்டுமே எடுத்து இருக்கிறார். மேலும் இவர் கடைசியாக களம் கண்ட போட்டியிலும் டக் அவுட் என தொடர்ந்து 3 டக் அவுட்டுகளைச் சந்தித்து இருக்கிறார். இதனால் கே.எல்.ராகுல் மீதான விமர்சனம் தொடர்ந்து அதிகரித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிக் கொண்ட டி20 தொடரில் தற்போது இந்தியா பின்னடைவை சந்தித்து இருக்கிறது. 2-1 என முன்னிலை பெற்று இருக்கிற இங்கிலாந்தை அடுத்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா வென்றால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout