கே.எல்.ராகுல் இவ்ளோ நல்ல மனிதரா? ரசிகர்களே வியந்து பாராட்டிய நிகழ்வு!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய கிரிக்கெட் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்துவரும் கே.எல்.ராகுல் செய்திருக்கும் ஒரு காரியம் தற்போது இணையத்தில் பலராலும் பாராட்டைக் குவித்து வருகிறது.
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக இருந்துவரும் கே.எல்.ராகுல் காயம் காரணமாக மேற்கு இந்திய அணிகளுக்கு எதிரான போட்டியில் கலந்துகொள்ளவில்லை. தற்போது இலங்கைக்கு எதிரான போட்டிகளிலும் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் இருந்துவருகிறது. இந்நிலையில் அவருடைய சிறப்பான ஆட்டத்தைப் பார்க்க முடியாமல் ரசிகர்கள் எப்போது வருவார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் எலும்புமஜ்ஜை நோயால் பாதிக்கப்பட்டும்கூட கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டுவரும் ஒரு சிறுவனைப் பற்றிய தகவலை கே.எல்.ராகுல் கேள்விப்பட்டுள்ளார். இதையடுத்து அந்தச் சிறுவனுக்கு ரூ.31 லட்சத்தை நன்கொடையாகக் கொடுத்து உதவியிருக்கிறார். இந்தத் தகவல் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
11 வயதான சிறுவன் வாரத் என்பவருக்கு எலும்பு மஜ்ஜை நோய் தாக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சிறு காயமோ, காய்ச்சலோ ஏற்பட்டால் அதிலிருந்து மீண்டுவர பல மாதங்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்படியிருக்கும்போது கிரிக்கெட்டராக வேண்டும் என்று வாரத் விரும்பியதால் அவருடைய தந்தை தொடர்ந்து வாரத்தை கிரிக்கெட் பயிற்சிக்கு அழைத்துச் சென்றுவருகிறார்.
மேலும் எலும்பு மஜ்ஜை சிக்கலை தீர்ப்பதற்காக கிவ் இந்தியா எனும் அமைப்பின் மூலம் நிதித்திரட்டும் பணியிலும் ஈடுபட்டு இருக்கிறார். ஆனால் இதுவரை 4 லட்சம் ரூபாய் மட்டுமே திரட்ட முடிந்த நிலையில் வாரத் பற்றிய தகவலை கேள்விப்பட்ட கே.எல்.ராகுல் உடனடியாக வாரத்திற்கு 31 லட்சத்தைக் கொடுத்திருக்கிறார். இதனால் அறுவை சிகிச்சை முடிந்து தற்போது வாரத் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. கே.எல்.ராகுல் செய்த இந்த காரியம் தற்போது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி பாராட்டைக் குவித்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout