ஐசிசி ரேக்கிங் பட்டியலில் உச்சத்துக்கு சென்ற இந்திய விக்கெட் கீப்பர்!!!

 

T20 தரவரிசை பட்டியலில் முதல் 3 இடத்திற்குள் நுழைந்து இருக்கிறார் இந்திய விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான K.L.ராகுல். ஐ.சி.சி. T20 தரவரிசை பட்டியலை உலகக் கிரிக்கெட் அமைப்பு நேற்று அறிவித்தது. இந்தப் பட்டியலில் விராட் கோலியைவிட இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல் 3 ஆவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இந்தப் பட்டியலில் விராட் கோலி 8 ஆவது இடத்தில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே நடைபெற்ற T20 போட்டியில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றது. இந்தப் போட்டியில் விராட் கோலி மிகவும் சிறப்பாக விளையாடி அதிக சராசரியை பெற்று இருக்கிறார். அவருடைய மொத்த ரன்கள் 134 ஆகவும் சராசரி 44.66 ஆகவும் இருந்து வருகிறது. T20 க்கான கடைசிப் போட்டியில் விராட் கோலி மிகச்சிறப்பாக விளையாடி 85 ரன்களை எடுத்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் T20 போட்டியில் கே.எல்.ராகுல் அரைச் சதம் அடித்தார். இதனால் T20 தரவரிசைப் பட்டியலில் 3 ஆவது இடத்தைப் பிடித்து இருந்த ஆஸ்திரேலிய கேப்டன் Aaron Finch ஐ பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தை கே.எல். ராகுல் பிடித்து விட்டார். பின்னர் ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான 2 மற்றும் 3 ஆவது T20 போட்டிகளில் ராகுல் 30 மற்றும் 0 ரன்களை எடுத்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் தொடக்க வீரரும் சிறப்பான பந்து வீச்சாளருமான ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை. இதனால் T20 தரவரிசைப் பட்டியலில் அவர் பின்தங்கி இருக்கிறார். இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேனாக இருந்தாலும் அவர் T20 தரவரிசைப் பட்டியலில் 14 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

இந்தப் பட்டியலில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பேட்ஸ்மேன் டேவிட் மாலன் முதல் இடத்திலும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இரண்டாவது இடத்திலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மாலன் பாகிஸ்தான் கேப்டன் அசாமை விட 44 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார். இந்தப் பட்டியலில் சிறந்த பேட்ஸ்மேன் வரிசையில் இந்திய விக்கட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் 3 ஆவது இடத்தைப் பிடித்து முன்னேறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

மதம் கடந்த மனிதம்… இந்து கோவிலுக்கு நிலத்தை நன்கொடையாகக் கொடுத்த இஸ்லாமியர்!!!

மதம் ஒருவேளை மனிதனைக் கட்டிப்போட்டாலும் மனிதம் எப்போதும் பரந்துபட்டதாகவே இருக்கும்

அனுமதி வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசியால் பாதிப்பா??? அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!!!

பிரிட்டன் நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிக்கு அந்நாட்டு அரசாங்கம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதி வழங்கியது.

கொரோனா பாதிப்பால் 9 மாத சிகிச்சை… மீண்டுவந்த இளம் பெண்ணின் நெகிழ்ச்சி அனுபவம்!!!

கடந்த 9 மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் பல்வேறு சிக்கலான சிகிச்சைக்குப் பின் உடல் நலம்பெற்று நேற்று வீடு திரும்பியுள்ளார்.

வாய்ப்பு கிடைத்தால் ரஜினியுடன் இணைவேன், ஆனால்... முக அழகிரியின் காமெடி பதில்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்பை வரும் 31-ஆம் தேதி வெளியிட உள்ளார் என்பதும் அவர் வரும் ஜனவரி மாதம் புதிய கட்சி தொடங்க உள்ளார் என்பதும் தெரிந்ததே.

என் மகளை அவர் தான் கொன்றுவிட்டான், அவரை நானே கொல்வேன்: சித்ரா தாய் ஆவேசம்

சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது என்றும், உடல் பிரேதப் பரிசோதனை செய்து முடிக்கப்பட்டவுடன்