சிஎஸ்கே மாஸ்ஸா பண்றாங்க: கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பெருமிதம்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. மும்பை அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்திய சிஎஸ்கே, நாளை சென்னையில் கொல்கத்தாவை பதம் பார்க்கும் என்பதில் சந்தேகமே இருக்காது.
இந்த நிலையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியை தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி வென்றது. இந்த வெற்றிக்கு பின்னர் மைதானத்தை விட்டு வெளியே வந்த தினேஷிடம் ஒரு பெண், கிரிக்கெட் பந்தில் ஆட்டோகிராப் கேட்டார். அவர் அதில் கையெழுத்திட்டு போட்டபோது அருகில் நின்றிருந்த ஒரு தமிழர் இப்படியே போனால் ஐம்பது கையெழுத்து போடுவிங்க போல என்று கேட்டார். அதற்கு 'ஜி அந்தம்மாவை கலாய்க்காதீங்க என்று கூறிவிட்டு சிஎஸ்கே மாஸ்ஸா பண்ணினாங்க' என்று கூறினார்.
சிஎஸ்கே அணியுடன் மோதும் எதிரணியின் கேப்டனாக இருந்தபோதும் சிஎஸ்கேவை அவர் புகழ்ந்து பேசியது அவருக்கு இருக்கும் மண்ணின் பாசத்தை காட்டுவதாகவே தெரிகிறது.
இருப்பினும் களத்தில் தன்னுடைய அணியின் வெற்றிக்காக தினேஷ் கார்த்திக் தனது முழு திறமையையும் வெளிப்படுத்துவார் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இருக்க முடியாது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout