ஐபிஎல் போட்டியில் விளையாடிய வீரருக்கு நிச்சயதார்த்தம்: விரைவில் திருமணம்

  • IndiaGlitz, [Tuesday,June 12 2018]

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் பெற்றது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த தொடரில் இறுதி போட்டிக்கு நெருங்கி வந்து பின்னர் வாய்ப்பை இழந்த அணி கொல்கத்தா அணி. இந்த அணியின் சிறந்த பேட்ஸ்மேனின் ஒருவரான நிதீஷ் ராணாவுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

நிதீஷ் ராணா கடந்த இரண்டு ஆண்டுகளாக சாச்சி மார்வா என்பவரை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு இருவரது குடும்பத்தினர்களும் பச்சைக்கொடி காட்டியதை அடுத்து கடந்த ஞாயிறு அன்று திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

விரைவில் திருமணம் செய்து இல்லற வாழ்வில் ஈடுபடவிருக்கும் ராணா-சாச்சிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அந்த அணியின் சமூக வலைத்தள பக்கத்தில் 'ராணா-சாச்சிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் குடும்பத்தின் வாழ்த்துக்கள். இருவரும் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறோம்' என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சக கிரிக்கெட் வீரர்கள் ராணாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

நீட் தேர்வு: சி.பி.எஸ்.இ-க்குக் ஆப்பு வைத்த மத்திய அரசு

மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வை சி.பி.எஸ்.இ அமைப்பு நடத்தி வந்த நிலையில் இனிமேல் இந்த தேர்வை சி.பி.எஸ்.இ நடத்தாது என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அஜித்தின் 'விசுவாசம்' படத்தில் இணைந்த 'காலா' நடிகை

தல அஜித் நடித்து வரும் 'விசுவாசம்' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் முடிந்தது என்பது தெரிந்ததே.

யூனிசெப் அமைப்பிற்காக இன்று களமிறங்கிய நடிகை த்ரிஷா

உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும், குழந்தைகளுக்கு உரிய கல்வியை வழங்க வேண்டும்

விஜய் பட வாய்ப்பு கிடைத்தால் என்ன கதை? கவுதம் மேனன் பேட்டி

தளபதி விஜய்யை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்பதே இன்றைய இளையதலைமுறை இயக்குனர்களின் வாழ்நாள் ஆசையாக உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே

டிரம்ப்-கிம் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு: முடிவுக்கு வரும் பகை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் ஆகியோர் இன்று சிங்கப்பூரில் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு சந்தித்து பேசினர். வரலாற்று சிறப்பு மிக்க