அடுத்தடுத்து வந்த 'அயலான்' அப்டேட்.. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குஷி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ திரைப்படம் நீண்ட தாமதத்திற்கு பிறகு தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படம் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தபோதிலும் சமூக வலைதளத்தில் ஒரு சிலர் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படும் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் பொங்கல் ரிலீஸ் என்பதை உறுதி செய்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் இரண்டாவது சிங்கள் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாகவும், இந்த பாடலுக்காக ரசிகர்கள் தயாராகுமாறும் அறிவித்துள்ளது
மேலும் ‘அயலான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் டிசம்பர் 26 ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து ‘அயலான்’ படத்தின் அப்டேட்டுக்களை தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்து வருகின்றன.
The countdown has begun! Our #Ayalaan will reach you from outer space in 45 days🔥
— KJR Studios (@kjr_studios) November 28, 2023
Releasing worldwide Pongal & Sankranti 2024✨#AyalaanFromPongal #AyalaanFromSankranti👽🛸#Ayalaan @Siva_Kartikeyan @TheAyalaan @arrahman @Ravikumar_Dir @24amstudios @Phantomfxstudio @bejoyraj… pic.twitter.com/SqDfNhaxX7
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com