அடிச்சு தூக்க தயாராகிவிட்டோம்: சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பாளரின் பரபரப்பு டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹீரோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த படம் குறித்த வழக்கு ஒன்று சமீபத்தில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ஹீரோ படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டதால், திட்டமிட்டபடி இந்த படம் ரிலீஸ் ஆகுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இந்த நிலையில் 'ஹீரோ’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் பதிவு செய்துள்ள சமூக வலைத்தள டுவீட்டில் டிஆர்எஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்த வழக்கில் பேச்சுவார்த்தைகள் நடத்தி அனைத்து பிரச்சனைகளும் முடிந்தாகிவிட்டது. எனவே ‘ஹீரோ’ படம் திட்டமிட்டபடி டிசம்பர் 20 தேதி வெளியிட்டு அடிச்சுதூக்குறோம்’ என்றும், போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் டாப் கியரில் சென்று கொண்டிருப்பதாகவும், விரைவில் இந்த படத்தின் இசை வெளியீடு, டிரைலர் உள்ளிட்ட புரமோஷன்கள் குறித்த அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த டுவிட்டால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இந்த படம் உறுதியாக டிசம்பர் 20ல் வெளியாகும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
சிவகார்த்திகேயன், அர்ஜூன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, ஷ்யாம் கிருஷ்ணன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
All issues sorted with TSR Films regarding #Hero release. As per plan, we are going to #AdchiThookify December 20. Top gear la post production poikitu iruku. Wait for the album, trailer, game & other promotions we have planned! ?????? @Siva_Kartikeyan @Psmithran @kalyanipriyan
— KJR Studios (@kjr_studios) November 23, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments