close
Choose your channels

'ஆலம்பனா'  ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது ஏன்? விளக்க அறிக்கை வெளியீடு..!

Friday, December 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வைபவ் நடித்த 'ஆலம்பனா' என்ற திரைப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவு காரணமாக இந்த படம் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படக்குழுவினர் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறித்து விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

'ஆலம்பனா' திரைப்படத்தின்‌ வெளியீடு தள்ளிவைக்கப்படுகிறது.

கெளஸ்துப்‌ என்டேர்டைன்மெண்ட்‌ மற்றும்‌ கேஜேஆர்‌ ஸ்டுடியோஸ்‌ தயாரிப்பில்‌ உருவாகியுள்ள 'ஆலம்பனா' படத்தின்‌ வெளியீடு தள்ளிவைக்கப்படுகிறது என்கிற தகவலை வருத்தத்துடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.

வைபவ்‌, பார்வதி நாயர்‌, முனிஷ்காந்த்‌, ரோபோ சங்கர்‌, திண்டுக்கல்‌ ஐ.லியோனி, பாண்டியராஜன்‌ மற்றும்‌ பலர்‌ நடித்துள்ள 'ஆலம்பனா' திரைப்படம்‌ டிசம்பர்‌ 15, 2023 ௮ன்று வெளியாகும்‌ என ௮றிவித்திருந்தோம்‌.

அறிவித்த தேதியில்‌ திரைப்படத்தை வெளியிட ௮ர்ப்பணிப்புடன்‌ நாங்கள்‌ முயற்சித்த போதிலும்‌, எதிர்பாராத சில சூழ்நிலைகள்‌ எங்களின்‌ பலத்திற்கும்‌ அப்பாற்பட்டு இருக்கிறது. எனவே, இந்த தவிர்க்க முடியாத சூழலால்‌ திரைப்படத்தின்‌ வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம்‌ ஏற்பட்டுள்ளது.

'ஆலம்பனா' குழந்தைகள்‌ மற்றும்‌ குடும்பங்களுக்கு மனதில்‌ கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படம்‌ என்பதால்‌, அவர்களுக்கான சிறந்த அனுபவத்தை வழங்குவதையயே நாங்கள்‌ நோக்கமாகக்‌ கொண்டுள்ளோம்‌. எனவே, அவர்களுக்கு மிகுந்த சுவாரஸ்யமான அனுபவத்தை கொடுக்கும்‌ வகையில்‌ ஆலம்பனா திரைப்படத்தின்‌ வெளியீட்டை அதற்கு பொருத்தமான தேதியில்‌ அறிவிக்கப்படும்‌ என்பதை கூறக்கொள்கிறோம்‌.

இந்த தவிர்க்க முடியாத சூழல்‌ காரணமாக எங்களின்‌ பார்வையாளர்கள்‌, திரைப்பட வெளியீட்டாளர்கள்‌, திரையரங்க உரிமையாளர்கள்‌, பத்திரிகைகள்‌ மற்றும்‌ ஊடக நண்பர்கள்‌ என அனைவருக்கும்‌ ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள்‌ வருந்துகிறோம்‌... உங்கள்‌ அனைவரின்‌ புரிதலும்‌, ஆதரவும்‌ முன்‌ எப்போதும்‌ போல இனிமேலும்‌ தொடா வேண்டும்‌ என்று மனதார கேட்டுக்கொள்கிறோம்‌.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment