பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் சகோதரர் மர்ம மரணம்! கேரளாவில் பரபரப்பு

  • IndiaGlitz, [Thursday,February 06 2020]

பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் சகோதரர் கேஜே ஜஸ்டின் இன்று மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவருடைய உடல் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது.

ஜஸ்டின் தனது குடும்பத்துடன் காக்கநாடு என்ற பகுதியில் உள்ள சர்ச் அருகே வசித்து வந்தார். நேற்று இரவு அவர் வெளியில் சென்றவர் வீடு திரும்பாததை அடுத்து அவரது குடும்பத்தினர் காவல்துறையினர்களிடம் புகார் அளித்தனர். காவல்துறையினர் ஜஸ்டினை தேடி வந்த நிலையில் ஒரு சடலம் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு ஜஸ்டின் குடும்பத்தினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஜஸ்டின் குடும்பத்தினர் சடலத்தை பார்த்து அவர்தான் ஜஸ்டின் என்பதை உறுதி செய்தனர். மேலும் ஜஸ்டின் மரணம் குறித்து விசாரணை செய்யுமாறு காவல்துறையினர்களிடம் அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டனர்.

பின்னனி பாடகர் கேஜே ஜேசுதாஸின் சகோதரர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது