மீண்டும் பாட வந்த காந்தக்குரல் பாடகர்! ரசிகர்கள் மகிழ்ச்சி

தமிழ் சினிமாவின் பழம்பெரும் பாடகரும் காந்தக்குரலார் என்று அனைவராலும் போற்றப்படுபவருமான கே.ஜே.ஜேசுதாஸ் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ஒரு படத்தில் பாடியுள்ளார்.

விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் ஜோடியாக நடித்து வரும் 'தமிழரசன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் புயலென வா” என்ற புரட்சிகரமான பாடலை இசைஞானி இளையராஜா இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடியுள்ளார்.

மீண்டும் பாட வந்த ஜேசுதாஸுக்கு பூங்கொடுத்து கொடுத்து இளையராஜாவும் இந்த படத்தின் இயக்குனர் பாபு யோகேஸ்வரன் மற்றும் சிவா ஆகியோர்களும் வரவேற்றனர். கடந்த ஆண்டு 'கேணி' என்ற படத்தில் எஸ்பிபி அவர்களுடன் ஒரு பாடலை பாடிய கே.ஜே.ஜேசுதாஸ், அதன் பின் இந்த படத்தில் தான் பாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், சுரேஷ்கோபி ராதாரவி சோனு சூட்,யோகிபாபு,சங்கீதா கஸ்தூரி ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன்,கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்..

இளையராஜா இசையில் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் புவன் சந்திரசேகர் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது.

More News

இந்த அரசியல் நாகரீகம் தமிழகத்திற்கு எப்போது வரும்?

தமிழகத்தில் திராவிட அரசியல் கட்சிகள் காலூன்றிய பின்னர் எதிர்க்கட்சிகளை எதிரிக்கட்சிகள் போல் பார்ப்பதும், ஆளும் கட்சி தலைவர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும்

ரூ.75 லட்சம் கொடுக்காவிட்டால் கிட்னியை விற்றுவிடுவேன்: தேர்தல் ஆணையத்திற்கு வேட்பாளர் மிரட்டல்

தேர்தல் செலவுக்காக ரூ.75 லட்சம் பணம் கொடுக்காவிட்டால் கிட்னியை விற்றுவிடுவேன் என தேர்தல் ஆணையத்திற்கு சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கமல்ஹாசனை குறி வைத்து அடிக்கும் கரு.பழனியப்பன்?

கடந்த சில நாட்களாக திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம்  செய்து வரும் இயக்குனர் கரு.பழனியப்பன், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியபோது

மாம்பழமா? மாபெரும் பழமா? யாருக்கு ஓட்டு குறித்து பார்த்திபன் பதிவு

தமிழகத்தில் மக்களவை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிகிறது.

23 வருடங்களுக்கு பின் பிரபுவுடன் ஜோடி சேரும் நடிகை!

கடந்த 1996ஆம் ஆண்டு இயக்குனர் சீமான் இயக்கத்தில் பிரபு நடித்த 'பாஞ்சாலங்குறிச்சி' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் 'ரோஜா' புகழ் மதுபாலா.