முத்தம் கொடுப்பதால் நோய் பரவுமா? பகீர் சந்தேகத்திற்கு மருத்துவப் பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மனிதர்கள் முத்தத்தை ஒரு பெரிய உணர்ச்சிப் பெருக்காக கொண்டாடி வருகிறோம். காரணம் முத்தம் கொடுக்கும்போது நம்முடைய உடலில் இருந்து ஆக்சிடாஸின் என்ற ஹார்மோன் சுரந்து அதொரு பிணைப்பை உருவாக்குகிறது. இதனால் மனித இனம் முத்தத்தை மீண்டும் மீண்டும் பெறுவதற்கு முயற்சிக்கிறது.
இந்த முத்தத்தில் தாய்- குழந்தைகள், தந்தை- குழந்தைகள், உறவினர்கள், நண்பர்களில் ஆரம்பித்து வாழ்க்கைத் துணை வரை அனைவரும் கொண்டாடி தீர்த்து விடவே நினைக்கிறோம். ஆனால் அளவிட முடியாத இந்த உணர்ச்சிப் பெருக்கிற்குப் பின்னால் நோய்த்தாக்கம் அதுவும் பாலியல் மூலம் பரவக்கூடிய நோய்கள் வரும் அபாயம் இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா?
முத்தம் என்பது பாலியல் உறவு தொடர்பாக ஏற்படும் நோய்களில் சிறிய அளவு தாக்கத்தை கொண்டு இருக்கிறது. இதனால் ஏற்படும் அறிகுறிகள் நேரடியாக பாலியல் மூலம் பரவக்கூடிய நோய்களுக்கு சமிக்ஞையாகவும் இருந்து வருகிறது.
முத்தம் கொடுக்கும்போது உமிழ்நீர் காரணமாக பாலியல் மூலம் பரவும் நோய்கள் மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்பு இருக்கிறது. இதனால் ஏற்கனவே நோய்ப் பாதிப்பு கொண்ட ஒருவரையோ அல்லது வாய்ப்புண் உள்ள ஒருவரையோ முத்தமிடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
ஹெர்ப்ஸ்- முத்தத்தின் மூலம் எளிதாக பரவும் வைரஸ்களில் இதுவும் ஒன்று. இந்த வைரஸ் வாய் அல்லது பிறப்புறுப்பு பகுதிகளில் தங்கி மற்றவருக்கு சிவப்பு அல்லது வெள்ளை கொப்புளங்களை உண்டு பண்ணுகிறது. இந்த ஹெர்ப்ஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நபரை நாம் முத்தமிடும்போது நமக்கும் இந்தப் பாதிப்பு எளிதாக வந்துவிடுகிறது. இதே வைரஸ் உடலுறவின்போது தன்னுடைய துணைக்கு பாலியல் தொடர்பான நோய்ப் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மையை கொண்டு இருக்கிறது.
சைட்டோமெலகோ- உமிழ்நீர் வழியாகப் பரவும் இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களக்கு நோய் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டு இருக்கிறது. இதனால் தொண்டை வலி, உடல்வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
சிபிலிஸ்- வாய், ஆசனபகுதி, பிறப்புறுப்பு போன்ற பகுதிகளில் தங்கி இருக்கும் பாக்டீயாக்கள் சிபிலிஸ் எனும் நோயை உண்டு பண்ணுகின்றன. முத்தமிடும்போது உமிழ்நீரில் கலந்து இருக்கும் இந்த வைரஸ்களும் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு நோய்த் தாக்கத்தை உண்டுபண்ணும்.
கேவிட்டிஸ்- முத்தமிடுவதால் பற்களில் கேவிட்டிஸ் வருவதற்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது ஒருவரின் வாயில் இருந்து மற்றவர்களுக்கு பரவும் பாக்டீரியாக்கள், பற்களில் நுண்குழியை ஏற்படுத்துமாம். அதுவும் பெற்றோர்களிடம் இருந்தே இது அதிக அளவில் குழந்தைகளுக்கு பரவுகிறதாம்.
மேலும் வயதான பிறகு காதல் உறவுகளில் முத்தமிட்டுக் கொள்ளும்போது ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு இந்தப் பாக்டீரியா பரவி அடுத்தவரின் பல் சொத்தையும் பெரிய காரணமாக மாறிவிடுகிறது. இதனால்தான் ஒருவர் பயன்படுத்திய டூத்பிரஷை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.
முத்தம் வெறுமனே பாலியல் தொடர்பான பிரச்சனைகளுக்கு மட்டுமல்லாது சில நேரங்களில் சுகாதாரக் கேடான நோய்களுக்கும் வழி வகுத்துவிடுகிறது. குறிப்பாக முத்தமிடுவதால் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு கிருமிகள் பரவி சளி, காய்ச்சல், குடல் தொடர்பான சிறுசிறு நோய்கள் ஏற்படுகின்றன.
முத்தமிட்டால் சோர்வு வரும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது முத்தமிடும்போது எப்ஸ்டீன்-பார் எனும் வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவுவதால் மோனோநியூக்ளியோசிஸ் எனும் நோய்ப்பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோய் அதிகளவு சோர்வை கொடுக்குமாம்.
தொண்டை நோயான ஸ்ட்ரெப்டோகாக்கஸ் எனும் நோய்க்கூட முத்தத்தினால் பரவுகிறது. முத்தமிடும்போது பாக்டீரியா பாதிப்பினால் ஏற்படும் இந்த நோய் தொண்டையில் வீக்கத்தை உண்டுபண்ணுகின்றன.
மேலும் முத்ததினால் ஈறுகளில் கூட பாதிப்பு வரலாம். அதாவது ஜிங்விட்டிஸ் எனும் வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்க்குப் பரவும்போது இந்த வைரஸ் ஈறுகளில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன.
இதுபோன்ற நோய்த்தாக்கம் வராமல் இருக்க பாதுகாப்பான வழிமுறைகள் அவசியம். அதுவும் குறிப்பாக ஒருவரின் உதட்டுப் பகுதியில் ஏதாவது சிவப்பு நிறத்தில் வடு இருந்தாலோ அல்லது புண் தென்பட்டாலோ அவரை முத்தமிடாமல் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
மேலும் இதுபோன்ற பாதிப்பு உள்ள நபர் தங்களுடைய துணையின் நலனுக்காக தாங்களே முத்தமிடுவதைத் தவிர்த்துக் கொள்ளலாம். மேலும் முத்தமிடுவதை தவிர உடலுறவின்போது வேறு இடங்களில் கடிப்பதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments