முத்தம் கொடுப்பதில் உள்ள சுவாரஸ்யமான உண்மைகள்.....!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒருவரை, மற்றொருவர் விருப்பத்துடன் முத்தமிடுவதால் அவர்களின் உடலிற்கும், மனதிற்கும் ஏராளமான நன்மைகள் உண்டாகிறது. முத்தத்தில் உள்ள சுவாரஸ்யமான நன்மைகளை பற்றி இதில் காண்போம்.
** முத்தம் என்பது உதடுகளின் சந்திப்பை தாண்டி, அதில் காதலின் ஆழம், பாச உணர்வு மற்றும் ஆசையின் எதிரொலி போன்ற ஏராளமான உள்ளுணர்வுகளும் அடங்குகிறது. முத்தம் ஒரு மனிதனின் ஆழ்மனது வரை சென்று சந்தோஷ உணர்வை கிளப்பக்கூடியது.
** முத்தம் கொடுக்கையில் மன அழுத்தம் குறைந்து, மன கவலை நீங்குகிறது.
** ‘பிரெஞ்ச் கிஸ்’ என்று அழைக்கப்படும், உதட்டுடன் உதடு சேர்ந்த முத்தம் கொடுக்கும்போது, தலைவலி நீங்கி, மகிழ்ச்சி உண்டாகிறது.
** முத்தம் தருவது ஒருவகையான உடற்பயிற்சியும் கூட. முத்தச்செயலானது 8 முதல் 16 கலோரிகள் வரை எரிக்கக்கூடியது. இதுகுறித்து மனநல நிபுணர்கள் கூறியிருப்பதாவது, "தியானம் செய்வதற்கு ஈடானது என்று கூறுகிறார்கள். முத்தத்தை பெறுபவர்கள் மற்றும் கொடுப்பவர்களுக்கு மனதில் உள்ள இறுக்கம் குறைந்து, உற்சாகம் கிடைக்கின்றது, இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
காமம் சார்ந்த முத்தம்......!
** உங்கள் துணையுடனோ, காதலன், காதலியுடனோ பஞ்சமே இல்லாமல் நீங்கள் முத்தமிடுங்கள். அவர்களுடைய உச்சி முதல் பாதம் வரை கொடுக்கும் முத்தமானது ஒருவிதமான காம உணர்வை உண்டாக்கக்கூடியது. ஒருவருக்கு கழுத்து, மார்பு, வயிறு, தொடை, பாதம் என ஒவ்வொரு இடத்தில் முத்தமிடும் போதும், ஒவ்வொரு விதமான உணர்வு தோன்றுகிறது.
காதலின் வெளிப்பாடு.......!
** ஒரு நபரின் கன்னங்களை பிடித்து, நெற்றியில் தரும் முத்தமானது அதிகபட்ச அன்பின் வெளிப்பாடாக கருதப்படுகிறது. இந்த முத்தம் கணவர், மனைவிக்கு இடையிலும், காதலன் காதலிக்கும் இடையில் இருந்தால் நம்பிக்கையை அதிகரிக்கும், பாசத்தை பலமடங்கு உயர்த்தக்கூடியது. தம்பதிகள் கழுத்து, தொப்புள் பகுதி, தொடைப்பகுதி மற்றும் காது மடல் உள்ளிட்ட இடங்களில் முத்தம் தரும் போது இது கிளர்ச்சியை தூண்டுகிறது.
அன்பான முத்தம்.....!
** பெற்றோர்கள் குழந்தைகளுக்கும், முதியவர்கள் பேரக்குழந்தைகளுக்கும் தரக்கூடிய முத்தம் அன்பான முத்தம் ஆகும். மூக்குகள் உரசிக்கொண்டு தரக்கூடிய முத்தம் எஸ்கிமோக்கள் முத்தம் என அழைக்கப்படுகிறது, இது பாசத்தின் வெளிப்பாடாகவும் கருதப்படுகிறது.
முத்தத்தின் இதர நன்மைகள்....!
** முக்கியமான பணிக்கோ, இதர வேலைகளுக்கோ கிளம்பும் போது முத்தம் தந்தால், அந்த வேளை எளிதாக முடியும் என்று தம்பதிகளின் காலங்காலமாக நம்பிக்கையாக உள்ளது.
** தமக்கு பிடித்தவர்களுக்கு முத்தம் கொடுக்கும்போது ஆக்சிடோசின் வெளிப்படுகிறது, இது அவர்களுக்கு போதை உணர்வையும், கிளர்ச்சியையும் ஏற்படுத்தி, உடலுக்கு நெகிழ்ச்சியை தருகின்றது.
** ஒருசிலருக்கு முத்தம் கொடுப்பதன் மூலம் அலர்ஜி ஏற்படுகிறது. இதற்கு ‘பிலிமாபோபியா’ என்று பெயர்.
** குழந்தை இல்லாத தம்பதிகள் அடிக்கடி முத்தமிடலாம், காரணம் இதனால் பெண்ணுடைய சினை முட்டை வளர்ச்சி தூண்டப்படுகிறது.
** குழந்தைக்கு தாய் அடிக்கடி முத்தம் கொடுக்கும்போது, அவர்களின் செரிமானத்தன்மை அதிகரிக்க செய்கின்றது.
** முத்தம் கொடுக்கையில் ஆக்சிடோசின், எண்டார்பின் அதிகம் சுரப்பதால் உடல்வலி நீங்குகிறது,
** கருவுற்றிருக்கும் பெண்களுக்கு முத்தமிடுகையில் அவர்கள் மகிழ்ச்சியை உணர்வார்கள், இந்த உணர்வை குழந்தையும் அனுபவிக்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout