ஒரே நேரத்தில் ரஜினி-கமல் படங்களில் நடிக்கும் நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கபாலி' திரைப்படம் கடந்த 17ஆம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டு தற்போது ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. வயதான டான் கேரக்டரில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் பிரகாஷ்ராஜ் நடிப்பதாக இருந்தது. ஆனால் இந்த படத்திற்காக தொடர்ச்சியாக 60 நாட்கள் காஷீட் கேட்டதால் பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரகாஷ்ராஜ் நடிக்கவிருந்த வேடத்தில் தற்போது கிஷோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழுவினர்களால் கூறப்படுகிறது. இதன்மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரின் படங்களிலும் ஒரே நேரத்தில் நடிக்கும் நடிகர் என்ற பெருமை கிஷோருக்கு கிடைத்துள்ளது. கமல்ஹாசனின் 'தூங்காவனம்' படத்திலும் கிஷோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிமாறனின் 'பொல்லாதவன்' படத்தில் தமிழில் அறிமுகமான கிஷோர் அதன் பின்னர் ஜெயம்கொண்டான், வெண்ணிலா கபடிக்குழு, ஆடுகளம், வனயுத்தம், ஆரம்பம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், ஜான்விஜய் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். ரஜினி படத்திற்கு இவர் இசையமைப்பது இதுதான் முதல் முறை. கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout