கிளப் ஹவுஸ்-ல் கெத்தாக பேசிய கிஷோர் கே சுவாமி.....!கொத்தாக தூக்கிய போலீஸ்.....!
Send us your feedback to audioarticles@vaarta.com
அரசியல் தலைவர்கள் குறித்து சமூகவலைத்தளங்களில் அவதூறாக பேசிய கிஷோர் கே சுவாமியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வரான முக ஸ்டாலின் குறித்து சமூக வலைத்தளங்களில் கிஷோர் கே சுவாமி மிகவும் கொச்சையாக பேசியதால், காவல் துறையினர் இவனை கைது செய்துள்ளனர். இதேபோல கடந்த பல வருடங்களுக்கு முன், பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாக பேசியதால் கிஷோரை கைது செய்யவேண்டும் என பலர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து எந்த முடிவுகளும் இன்னும் எடுக்கவில்லை.
சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றிபெற்று திமுக ஆட்சியை பிடித்தது. அச்சமயத்திலிருந்து கிஷோர் கே சுவாமி திமுகவினரிடமும், தருமபுரி எம்பி டாக்டர் செந்தில் குமாரிடமும் தைரியமிருந்தால் என்னை கைது செய்யுங்கள் என்று சவால் விட்டிருந்தார். இந்தநிலையில் தற்போது கலைஞர்,ஸ்டாலின் குறித்ததும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்துள்ளான்.இதேபோல் "கிளப் ஹவுஸ்" என்ற ஆப்-பில் "கிஷோர் சாமியை கைது செய்யவேண்டும் என்று தலைப்பில், இவரே விவாதத்தையும் நடத்தியுள்ளார். இதில் இவரது ஆதரவாளர்கள் இவருக்கு சாதகமாக பேச, மற்றவர்கள் எதிரே பேச, கிஷோர் முடிந்தால் என்னை கைது செய்யட்டும் என்ற அதிகார தோணியில் மிரட்டியுள்ளார். முன்னாள் தலைவர்கள் குறித்து அவதூறாக பேசிவிட்டு, சமூக வலைத்தளங்களில் சவால் விட்ட சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுநாள் வரை பொறுமையாக இருந்த தமிழக காவல் துறையினர், அண்மையில் கிஷோர் பேசிய பேச்சால் இன்று காலை அவரை கைது செய்துள்ளனர். இவனை ஜூன் 28-வரை செங்கல்பட்டு சிறையில் வைக்கும்படி ரிமாண்ட் செய்யப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments