பொது சேவை செய்தால் 'கபாலி' இலவச டிக்கெட். புதுவை ஆளுனரின் புதுமை ஐடியா
Thursday, June 30, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் புரமோஷன் ஃபைவ் ஸ்டார் சாக்லேட்டில் இருந்து ஏர் ஆசியா விமானம் வரை பரவியுள்ள நிலையில் தற்போது புதுச்சேரி கலெக்டர் மற்றும் ஆளுனர் மூலமாகவும் பரவி வருகிறது.
புதுச்சேரியில் பொது சேவை செய்யும் நபர்களுக்கு பரிசாக 'கபாலி' படத்தின் டிக்கெட் வழங்கப்பட்டு வருவதாகவும், பொதுச்சேவையை ஊக்குவிக்கும் வகையில் இந்த முயற்சி புதுவை கலெக்டர் மூலம் செய்யப்பட்டிருப்பதாகவும் சமீபத்தில் புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுனராக பதவியேற்ற இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.
மேலும் அவர் புதுச்சேரியை தூய்மையாக்க ரஜினிகாந்த் பிராண்ட் அம்பாசிடராக வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுவை ஆளுனரின் வேண்டுகோளை ரஜினிகாந்த் ஏற்றுக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments