சுஷாந்துக்காக கதறிய தமிழ் நடிகை! வைரலாகும் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ’வில்லன்’, விக்ரம் நடித்த ’ஜெமினி’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை கிரண், சுஷாந்துக்காக கதறி அழுத வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாலிவுட் பிரபல நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் திடீரென மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தற்கொலைக்கு ஒரு பக்கம் பாலிவுட் திரையுலகமே கண்ணீர் வடித்தாலும், இன்னொரு பக்கம் அவருடைய தற்கொலைக்கு பாலிவுட் முன்னணி பிரமுகர்கள் தான் காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரதமர் மோடி முதல் பலர் இரங்கல் தெரிவித்து, அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.
இந்த நிலையில் தமிழ் திரையுலக நடிகர் நடிகைகள் பலரும் சுஷாந்த் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் அஜித் நடித்த ’வில்லன்’ விக்ரம் நடித்த ’ஜெமினி’, சரத்குமார் நடித்த ‘அரசு’, விஜய் நடித்த ‘திருமலை’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை நடிகை கிரண் ரத்தோட், சுஷாந்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ஒரு பக்கம் சுஷாந்த் சிரித்தபடி இருக்கும் பழைய வீடியோ பிளே ஆகிக் கொண்டிருக்கும் போது, இன்னொரு பக்கம் கிரண், கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சிகள் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. இந்த வீடியோவில் அவர் ’சுஷாந்த் ப்ளீஸ் திரும்ப வாருங்கள்’ என்று அவர் கேப்ஷனாக பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#SushantSinghRajput ????@itsSSR Please come back. pic.twitter.com/BNafLNiu8q
— Kiran Rathore (@KiranRathOffici) June 18, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments