'பிக்பாஸ் 4' நிகழ்ச்சியில் அஜித், விஜய் பட நடிகை?

உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் ’பிக்பாஸ் 4’ நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோவை கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டு இருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் வரும் அக்டோபர் 10ம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என தெரிகிறது.

இந்த நிலையில் 'பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் ஏற்கனவே ரம்யா பாண்டியன், சூர்யா தேவி, புகழ், ஷிவானி நாராயணன், உள்பட பலர் பங்கேற்க உள்ளதாக செய்திகள் வெளியானது. தற்போது வெளிவந்துள்ள செய்தியின்படி நடிகை கிரண் ரத்தோட் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித் நடித்த 'வில்லன்’ விஜய் நடித்த ’திருமலை’ விக்ரம் நடித்த ’ஜெமினி’ கமலஹாசன் நடித்த ’அன்பே சிவம்’ உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.250 கோடி சம்பளமா? திரையுலகினர் ஆச்சரியம்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட இந்தியாவின் பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதும் அனைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது

இயக்குனர் ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்த தகவல்!

'அட்டக்கத்தி' என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் பா ரஞ்சித், அதன்பின் 'மெட்ராஸ்' என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தார்.

முதலாளியும் நடிக்கலாம் என்பதை ஆரம்பித்து வைத்தவர் வசந்தகுமார் தான்: பிரபல தமிழ் ஹீரோ புகழாரம்

கன்னியாகுமரி தொகுதி எம்பியும் பிரபல தொழிலதிபருமான எச்.வசந்தகுமார் அவர்கள் நேற்று முன் தினம் மாலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

உலகின் மிக நீள பேருந்து பாதை டெல்லி-லண்டன் விரைவில் தொடக்கம்: எத்தனை நாள், எவ்வளவு கட்டணம்?

உலகின் மிக நீளமான பேருந்து பாதையான டெல்லி முதல் லண்டன் வரையிலான பேருந்து பாதை விரைவில் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது

கொரோனாவில் இருந்து மீண்ட விஜய் பட நாயகி: 21 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டே வந்தாலும் இன்னொரு பக்கம் கொரோனா வைரஸில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கையும்