'கபாலி' விநியோகிஸ்தரிடம் கவர்னர் கொடுத்த உறுதிமொழி
- IndiaGlitz, [Friday,July 01 2016]
திரையுலகினர்களுக்கு எத்தனையோ பிரச்சனை இருந்தாலும் தீராத பிரச்சனையாக இருந்து வருகிறது திருட்டு டிவிடி பிரச்சனை. திருட்டு டிவிடியை ஒழிக்க புதியதாக பொறுப்பேற்ற நடிகர் சங்க நிர்வாகிகள் உள்பட பல திரையுலகினர் தீவிரமாக அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் புதுச்சேரி ரிலீஸ் உரிமையை பெற்ற லெஜண்ட்ஸ் மீடியா ஜி.பி.செல்வகுமார் இன்று புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமி ஆகியோர்களை நேரில் சந்தித்து தமிழ் படங்களின் திருட்டு வி.சி.டி. யை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தார்.
திருட்டு வி.சி .டி யை முழுமையாக ஒழிக்க தகுந்த நடவடிக்கை எடுப்பதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் கவர்னர் கிரண்பேடி ஆகியோர் ஜி.பி.செல்வகுமாரிடம் உறுதி அளித்துள்ளனர்.
இந்நிலையில் பொது இடத்தை சுத்தப்படுத்துபவர்கள் மற்றும் வீடுகளில் புதியதாக கழிவறை கட்டுபவர்களுக்கு 'கபாலி' படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கட் வழங்கவுள்ளதாக புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி அறித்திருந்ததை நேற்று பார்த்தோம்.