பரபரப்பை ஏற்படுத்திய கிரண்பேடியின் பேத்தி வீடியோ!
- IndiaGlitz, [Saturday,April 06 2019]
புதுவை துணை நிலை ஆளுனரான கிரண்பேடி, அம்மாநில முதல்வருடன் மோதல் போக்கை கடைபிடித்து அடிக்கடி தலைப்பு செய்திகள் இடம்பெற்று வருகிறார். இந்த நிலையில் கிரண்பேடியின் பேத்தி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் கிரண்பேடி பேத்தி கூறியதாவது:
நான் கிரண்பேடியின் ஒரே பேத்தி. அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையில் நிறைய பிரச்சினைகள் இருந்தாலும், அந்த பிரச்சனைகளில் நான் தலையிட மாட்டேன் என்று நீங்கள் கூறினீர்களே பாட்டி! இப்போது மட்டும் ஏன் பாட்டி தலையிடுகிறீர்கள்? போலீஸை வைத்து அப்பாவை ஏன் மிரட்டுகிறீர்கள்? என்னை யாரும் கடத்தவில்லை. நான் அப்பாவுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறி, தனது தந்தையையும் அந்த வீடியோவில் அவர் காட்டியுள்ளார்.
மேலும் தனது அம்மாவையும் பாட்டியையும் நினைத்து வெட்கப்படுவதாகவும், என் அப்பாவுக்கு ஆதரவு தர விரும்புவோர் கமெண்ட் செய்யுங்கள் என்றும் கிரண்பேடியின் பேத்தி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.