"கிங் ஆஃப் கொத்தா" - செப்டம்பர் 29, 2023 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகிறது
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ள இப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, பிரசன்னா, ஷபீர் கல்லாரக்கல், கோகுல் சுரேஷ், நைலா உஷா, அனிகா சுரேந்திரன், ஷம்மி திலகன், சுதி கொப்பா, செம்பன் வினோத் ஜோஸ், ரித்திகா சிங் மற்றும் சௌபின் ஷாகிர் சிங் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
“கிங் ஆஃப் கொத்தா” உலகில் அடியெடுத்து வைக்கும் ராஜு என்ற இளைஞனின் பயணமும், கேங்ஸ்டர் உலகில் அவன் ஏற்படுத்தும் மாற்றமும் தான் இந்த படத்தின் கதை. ராஜுவின் பயணத்தில் அவன் வெகு சாதாரண மனிதனாக இருந்து அடிதடியில் அடியெடுத்து வைத்து, கேங்ஸ்டர் உலக தாதாவாக மாறும் அவனின் பரிணாம வளர்ச்சி தான் இப்படம். கோதா நகரில் அவன் அதிகாரத்தின் உச்சத்தை அடைய, தியாகங்களைச் செய்கிறான். இந்தத் திரைப்படம் நிலையான ஒரு கேங்க்ஸ்டர் கதையாக இல்லாமல், அதிவேகமான சினிமா அனுபவத்தைத் தரும், பரபரப்பான திரைக்கதையுடன் காதலின் பக்கத்தையும் கூறுகிறது.
Wayfarer Films மற்றும் Zee Studios தயாரிப்பில் உருவாகியுள்ள “கிங் ஆஃப் கொத்தா” திரைப்படம், நட்சத்திர நடிகர்கள், வித்தியாசமான களம், பரபரப்பான திரைக்கதை, கணிக்க முடியாத திருப்பங்கள் என ஒரு புதுமையான சினிமா அனுபவத்தை தருவதுடன், மறக்க முடியாத சினிமா பயணமாக இருக்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments