'புஷ்பா' ரிலீசுக்கு முன் அல்லு அர்ஜூன் செய்த மகத்தான செயல்!

  • IndiaGlitz, [Thursday,December 09 2021]

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சமந்தா, பகத் பாசில். உள்பட பலர் நடித்த ’புஷ்பா’ திரைப்படம் வரும் 17ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படம் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அல்லு அர்ஜுன் திரையுலக வரலாற்றில் இந்த படம் ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் தென்னிந்திய திரையுலக வரலாற்றில் இந்த படத்தின் வசூல் மிகப்பெரிய சாதனை செய்யும் என்றும் திரையுலக வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்திற்காக கடந்த இரண்டு வருடங்களாக கடுமையாக உழைத்த படக்குழுவினர்களுக்கு அல்லு அர்ஜுன் மகத்தான பரிசை வாரி வழங்கியுள்ள செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் பணிபுரிந்த சுமார் 35 முதல் 40 நபர்களுக்கு தலா 10 கிராம் தங்க காசு கொடுத்துள்ளதாகவும், அதேபோல் சில முக்கிய பணியாளர்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் பரிசு கொடுத்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அல்லு அர்ஜுனின் இந்த மகத்தான செயலை படக்குழுவினர்கள் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகமே பாராட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.