முடிவுக்கு வருகிறது 7 ஆண்டு திருமண வாழ்க்கை: விவகாரத்து நோட்டீஸ் அனுப்பிய உலகப்புகழ் பெற்ற நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக புகழ்பெற்ற நடிகை மற்றும் மாடல் அழகி கிம் கர்தாஷியன் தனது கணவர் கென்யா வெஸ்ட் என்பவரை விவாகரத்து செய்ய வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியதாக வெளிவந்துள்ள செய்திகள் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் நடிகையாகவும், ரியாலிட்டி ஷோ நடத்தும் செலிபிரிட்டியாகவும், மாடல் அழகியாகவும் இருந்து வரும் கிம் கர்தர்ஷன், பிரபல ராப் பாடகர் கென்யே வெஸ்ட் என்பவரை கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர் என்பதும் அதில் ஒரு குழந்தை பிறந்து 19 மாதங்கள் மட்டுமே ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பாடகர் மீக் மில் என்பவருடன் கிம் கர்தாஷியன் நட்பில் இருந்ததாகவும் இருவரும் திருமணம் செய்ய போவதாகவும் வதந்திகள் கிளம்பின. இந்த நிலையில் தற்போது கிம் தனது கணவர் வெஸ்ட்டை விவாகரத்து செய்ய வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் இதனை இரு தரப்பினருக்கும் உறுதி செய்துள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து ஏழு வருட திருமண பந்தம் முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கிம், வெஸ்ட் ஆகிய இருவரும் நான்கு குழந்தைகளையும் இணைந்து பராமரிக்க வேண்டும் என்றும் இருவரும் இணைந்து வாங்கிய சொத்துக்களை சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout