சர்வாதிகாரத்துக்கு ஒரு எல்லையே இல்லையா? கொரோனா விஷயத்திலும் பகை பாராட்டும் வடகொரியா!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகத்தின் பார்வையில் இருந்து எப்போதும் ஒளிந்து கொண்டே இருக்கும் வடகொரியா கொரோனா நேரத்தில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவித்து இருந்தது. அங்கு வாழும் மக்களுக்கு சரியான உணவு கிடைப்பதில்லை, மேலும் மருத்துவக் கட்டமைப்புக்கள் குறைவாக இருக்கிறது என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியிருந்தது. இவ்வளவு ஏன் அந்த நாட்டில் வாழ்ந்து நியூயார்க்கிற்குத் தப்பிச்சென்ற பெண்மணி ஒருவர் தனது 13 ஆவது வயதுவரை பூச்சிகளை உண்டு வாழ்ந்ததாக பொதுவெளியில் தெரிவித்து இருந்தார்.
அதுமட்டுமல்ல வடகொரியவில் கேட்பாரற்று கிடக்கும் பிணங்கள் ஏராளம் என்றும் புரதச்சத்திற்கு அந்நாட்டின் பெரும்பாலான மக்கள் பூச்சிகளைத்தான் நம்பியிருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் வடகொரியாவில் கொரோனா தாக்கம் நிலைமையை மேலும் மோசமாக்கி வருவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இப்படியிருக்கும் வடகொரியா தற்போது தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்த முகக்கவசங்களை திருப்பி அனுப்பி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. காரணம் அவை தென்கொரியாவில் தயாரிக்கப்பட்டவை என்ற ஒரே காரணத்திற்காக அத்யாவசியத் தேவையான முகக்கவசங்களைக் கூட திருப்பி அனுப்பி வருவதாகத் தகவல் தெரிவிக்கின்றன. வடகொரியாவில் முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடுகள் நிலவி வரும் சூழலில் அதிபர் கிம் இன் நிர்வாகம் இப்படி செய்வதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஜுலை மாதத்தில் தென்கொரிய எல்லையில் உள்ள கோசங்கி எனும் பகுதியில் கொரோனா அறிகுறிகளோடு ஒருவர் இருந்தார் எனக் கூறப்பட்ட நிலையில் தென்கொரியாவின் அனைத்து எல்லைகளையும் இழுத்து மூடினார் கிம். அடுத்ததாக தென்கொரியாவுடன் இருக்கும் அனைத்து நிர்வாக உறவுகளையும் துண்டித்துக் கொண்டார். தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையிலும் இதே நடைமுறையைக் கையாளுகிறார் கிம். இப்படியே போனால் அந்த மக்களின் நிலைமை என்னவாகுமே என சர்வதேச அரங்கில் அதிபர் கிம் மீது விமர்சனங்களும் வைக்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments