தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20வது எம்.எல்.ஏ: இம்முறை யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதை பார்த்து வருகிறோம். குறிப்பாக நேற்று தமிழகத்தில் சுமார் 7 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே சமயத்தில் கொரோனாவில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது ஒரு ஆறுதலான செய்தி ஆகும்
இந்த நிலையில் தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், காவல்துறையினர் உள்பட பல துறைகளிலும் உள்ளவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது
அந்த வகையில் தற்போது ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த 19 எம்எல்ஏக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது என்பதும் இதில் ஒரு சிலர் அமைச்சர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.
ஆம் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் என்பவருக்கு கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இதுவரை அதிமுக, திமுக எம்எல்ஏக்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments