கில்லாடி, எட்டப்பன் அவர்.. நம்பாதீங்க...! முதல்வர் பிரச்சாரத்தில் காரசாரப்பேச்சு..!
- IndiaGlitz, [Wednesday,March 24 2021]
அதிமுக-வின் ஆட்சியை கவிழ்க்க திமுக பக்கம் சென்ற செந்தில் பாலாஜியை யாரும் நம்ப வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.
கரூர் தொகுதியில் அதிமுக சார்பாக நிற்கும் அமைச்சர் எம்.எஸ்.விஜயபாஸ்கருக்கு, ஆதரவாக முதல்வர் பழனிச்சாமி அண்மையில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
திமுக-வினர் ஆட்சியில் இல்லாமலே மக்களை மிரட்டுகிறார்கள். கரூரில் விலையுள்ள நிலங்கள் திமுக கண்ணில் பட்டால் காணாமல் போகும். உதயசூரியன் சார்பாக வேட்பாளராக நிறுத்தப்பட்ட செந்தில்பாலாஜி 5 காட்சிகள் மாறியவர். அதிமுக-வை கவிழ்ப்பதற்காகவே, திமுகவிற்கு தாவிய பச்சோந்தி அவர். மக்களை ஏமாற்றுவதில் கில்லாடி, அதனால் நீங்கள் அவரை நம்பி ஏமார்ந்துவிடாதீர்கள். பொதுக்கூட்டங்கள் மற்றும்
சட்டசபையில் ஸ்டாலினை பற்றி இழிவாக பேசியவர், இன்று புகழ்ந்து பேசுகிறார். திமுக ஆட்சியின்போது கட்டப்பஞ்சாயத்து செய்து, அராஜக ஆட்சி நடத்தி வந்தது. இவர்களின் ஆட்சியின்போது பலர் மின்வெட்டு இழப்பால் வேலையிழந்து தவித்து வந்தனர். நம் நாட்டில் உள்ள கட்சிகளில் நல்ல தலைவர்கள் ஆட்சிக்கு வந்து, வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அதிலும் அதிமுக தலைவர்கள் மக்களுக்காக மட்டுமே வாழ்பவர்கள். கரூர் தொகுதியில் போட்டியிடும் விஜயபாஸ்கர் அனைவரையும் மதிக்கக்கூடிய பண்பாளர். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு உங்களை தேடி வரும், வேட்பாளர் இவர். இரட்டை இலை சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள விஜய பாஸ்கருக்கு, வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று முதல்வர் மக்களிடம் வாக்கு சேகரித்தார்.