தூங்காவனம் - கபாலி ஒரு அபூர்வ ஒற்றுமை
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் கதை குறித்து பல்வேறு செய்திகள் அவ்வபோது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது பிரபல ஹாலிவுட் நடிகர் Liam Neeson நடித்த Taken படத்தை தழுவி எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடத்தப்பட்ட மகளை தேடி கண்டுபிடிக்க ஒரு தந்தை செய்யும் சாகசங்கள்தான் Taken படத்தின் கதை என்பது அனைவரும் அறிந்ததே.
இதேபோல் 'கபாலி' படத்தில் வயதான கேங்க்ஸ்டாராக இருக்கும் ரஜினியின் மகள் கடத்தப்படுவதாகவும், தனது மகளை கண்டுபிடிக்க மீண்டும் களத்தில் இறங்கி பலவித சாகசங்களை ரஜினி செய்யும் படம்தான் 'கபாலி' என்றும் கூறப்படுகிறது.
உலக நாயகன் கமல் நடிப்பில் வரும் தீபாவளிக்கு வரும் திரைப்படமான 'தூங்காவனம்' படமும் கடத்தப்பட்ட மகனை கமல் கண்டுபிடிக்கும் கதைதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமும் ஹாலிவுட் படமான 'Sleepless Night' படத்தை தழுவி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments