'தலைகாலு புரியலை' : சசிகுமாருடன் இணைந்த கவுதம் மேனன்

  • IndiaGlitz, [Wednesday,July 13 2016]

சசிகுமார் நடித்த 'வெற்றிவேல்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் அடுத்ததாக நடித்த 'கிடாரி' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் டிராக் ரிலீஸ் ஆகும் தேதி மற்றும் நேரம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
'கிடாரி' படத்திற்கு இசையமைத்துள்ள தர்புகா சிவா, கம்போஸ் செய்த 'தலைகாலு புரியலை' என்று தொடங்கும் பாடல் நாளை மறுநாள் அதாவது ஜூலை 15ஆம் தேதி காலை 10 மணிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. மோகன்ராஜ் எழுதிய இந்த பாடலை அனிதா மற்றும் வேல்முருகன் பாடியுள்ளனர். இந்த பாடலை பிரபல இயக்குனர் கவுதம் மேனன் ரிலீஸ் செய்யவுள்ளார்.
'வெற்றிவேல்' படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த நிகிலா மீண்டும் ஒருமுறை இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பதும் நெப்போலியன் இந்த படத்தில் மீண்டும் ரிஎண்ட்ரி ஆகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில், பிரவீண் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை பிரசாந்த் முருகேசன் இயக்கி வருகிறார்.

More News

காதலை தவிர்த்த நயன்தாராவும் த்ரிஷாவும்

கோலிவுட் திரையுலகில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகைகளாக விளங்கி வருபவர்கள் த்ரிஷாவும் நயன்தாராவும் என்பது அனைவரும் அறிந்ததே...

சிம்புவின் 'AAA' படத்தில் ஸ்ரேயாவின் கேரக்டர்

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் 'அன்பாவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

முடிவுக்கு வந்தது ராகவா லாரன்ஸின் அடுத்த படம்

கடந்த ஆண்டு 'காஞ்சனா 2' என்ற சூப்பர் ஹிட் கொடுத்த ராகவா லாரன்ஸ் நடித்து வரும் அடுத்த படம் 'மொட்டசிவா கெட்ட சிவா'...

சுந்தர் சி-தேனாண்டாள் பிலிம்ஸ் படத்தில் இணைந்த மிகப்பெரிய டெக்னீஷியன்

கோலிவுட் தயாரிப்பு நிறுவனங்களின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருக்கும் 100வது படம்...

'கபாலி' இயக்குனரின் அடுத்த ஆசை இதுதான்

இன்று உலகமே ஜூலை 22ஆம் தேதியை எதிர்பார்த்து கொண்டிருக்கின்ற ஒரு விஷயம் என்னவெனில் அது கபாலி' ரிலீஸ் தினம் என்பதால்...