இந்தியன் பனோரமாவில் தேர்வான தமிழ்திரைப்படம்: குவியும் வாழ்த்துக்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுக்க புகழ்பெற்ற திரைப்பட விழாவாக 80 வருடங்களாக நடந்து வரும் கோவா சர்வதேச திரைப்படவிழாவில் இந்தியன் பனோராமா பிரிவில், ஜெய் பீம் படத்துடன் “கிடா” எனும் தமிழ் படமும் தேர்வாகி அசத்தியுள்ளது.
ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தமிழ் சினிமாவை உயர்த்தி பிடிக்கும் உன்னத படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கிடா”.
மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படம் முழுதாக முடிந்தவடைந்த நிலையில், திரைக்கு வரும் முன்னதாகவே கோவா திரைப்பட விழாவிற்கு தேர்வாகி அசத்தியுள்ளது. கோவா திரைப்படவிழாவில் இந்தியன் பனோராமா பிரிவில் மூன்று தமிழ்ப் படங்களில், ஒரு படமாக இப்படம் தேர்வாகியுள்ளது.
தமிழர்களின் வாழ்வியலை அச்சு அசலாக திரையில் வடிக்கும், ஒரு மாறுபட்ட காவியமாக இப்படம் உருவாகியுள்ளது. புதுமுகங்களின் முயற்சியில் உருவாகியுள்ள இப்படத்தை “கிருமி, ரெக்க” படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த இயக்குநர் ரா வெங்கட் இயக்கியுள்ளார். தெலுங்கு திரையுலகில் 35 வருடங்களாக பல வெற்றிப்படங்களை தந்த ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா இப்படத்தை தயாரித்துள்ளனர்.
பூ ராமு, காளிவெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ரா வெங்கட் இயக்கத்தில் தீசன் இசையில் ஜெயப்பிரகாஷ் ஒளிப்பதிவில் ஆனந்த் ஜெரால்டின் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout