மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில், “கிடா” திரைப்படம்!!
Send us your feedback to audioarticles@vaarta.com
சர்வதேச விழாக்களில் கவனம் ஈர்க்கும் கிடா திரைப்படம் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது !!
ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ரா.வெங்கட் இயக்கத்தில், பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் உருவாகியுள்ள கிடா (Goat) திரைப்படம். வாழ்வியலை அழகாகச் சொல்லும் ஒரு அழுத்தமான கலைப்படைப்பாக உருவாகியுள்ள இப்படம் சர்வதேச விழாக்களில் கவனம் ஈர்த்து வருகிறது,
சமீபத்தில், இந்தியன் பனோரமா மற்றும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆகஸ்ட் 11 to 20 வரை நடக்கும் 14th Indian film festival of Melbourne என்ற திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கிடா திரைப்படத்தில் பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவு பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இன்னும் திரைக்கு வராத நிலையில் உலகம் முழுக்க பல திரைப்பட விழாக்களில், இப்படத்திற்கு உட்சபட்ச பாராட்டுக்கள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுக்க உள்ள திரை ரசிகர்களைக் கவர்ந்துள்ள இப்படம், தமிழக ரசிகர்களை கவரும் வகையில் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
பூ ராமு, காளி வெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com