close
Choose your channels

என் கிடா கிடைக்காம அலைஞ்சபோது எந்த சாமி உதவி செஞ்சது? 'கிடா'டிரைலர்..!

Monday, October 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தீபாவளி.. ஏழை பணக்காரன், ஜாதி மதம்னு, எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடும் ஒரு பெரிய பண்டிகை’ என்ற டைட்டிலுடன் ’கிடா’ திரைப்படத்தின் டிரைலர் ஆரம்பமாகிறது.

காளி வெங்கட் நடிப்பில் உருவாகிய ’கிடா’ திரைப்படம் நவம்பர் 11ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த படம் ஒரு தாத்தா மற்றும் பேரனுக்கு இடையே இருக்கும் நெகிழ்ச்சியான உறவு தான் கதை. தீபாவளிக்கு புதுத்துணி பேரனுக்கு எடுக்க வேண்டும் என்பதற்காக தாத்தா செய்ய முயற்சி, அந்த முயற்சி அடையும் தோல்விகள், அதன் பின் அவர் எடுக்கும் முடிவு, அந்த முடிவால் ஏற்படும் விபரீதம் ஆகியவைதான் இந்த படத்தின் கதை

ரா வெங்கட் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு தீசன் இசையமைத்துள்ளார். ஜெயபிரகாஷ் ஒளிப்பதிவில், ஆனந்த் ஜெரால்டின் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

ஏற்கனவே இந்த படம் பல சர்வதேச விருதுகளை பெற்றுள்ள நிலையில் தற்போது தீபாவளி அன்று திரைக்கு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment