என் கிடா கிடைக்காம அலைஞ்சபோது எந்த சாமி உதவி செஞ்சது? 'கிடா'டிரைலர்..!

  • IndiaGlitz, [Monday,October 23 2023]

தீபாவளி.. ஏழை பணக்காரன், ஜாதி மதம்னு, எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடும் ஒரு பெரிய பண்டிகை’ என்ற டைட்டிலுடன் ’கிடா’ திரைப்படத்தின் டிரைலர் ஆரம்பமாகிறது.

காளி வெங்கட் நடிப்பில் உருவாகிய ’கிடா’ திரைப்படம் நவம்பர் 11ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த படம் ஒரு தாத்தா மற்றும் பேரனுக்கு இடையே இருக்கும் நெகிழ்ச்சியான உறவு தான் கதை. தீபாவளிக்கு புதுத்துணி பேரனுக்கு எடுக்க வேண்டும் என்பதற்காக தாத்தா செய்ய முயற்சி, அந்த முயற்சி அடையும் தோல்விகள், அதன் பின் அவர் எடுக்கும் முடிவு, அந்த முடிவால் ஏற்படும் விபரீதம் ஆகியவைதான் இந்த படத்தின் கதை

ரா வெங்கட் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு தீசன் இசையமைத்துள்ளார். ஜெயபிரகாஷ் ஒளிப்பதிவில், ஆனந்த் ஜெரால்டின் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

ஏற்கனவே இந்த படம் பல சர்வதேச விருதுகளை பெற்றுள்ள நிலையில் தற்போது தீபாவளி அன்று திரைக்கு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இந்த சீசனின் முதல் ஓப்பன் நாமினேஷன்.. குறி வைக்கப்பட்ட பிக்பாஸ் பெண்  போட்டியாளர்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த சீசனின் முதல் ஓப்பன் நாமினேஷன் குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

25 வருட உறவை முறித்து கொண்ட கவுதமி.. உருக்கமான அறிக்கை..!

 நடிகை கவுதமி தனது 25 வருட உறவை முறித்து கொள்வதாக உருக்கமான அறிக்கை வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

'புதுவசந்தம்' சித்தாரா நடிக்கும் புதிய சீரியல்.. உருக வைக்கும் புரமோ வீடியோ..!

'புது வசந்தம்' திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து அதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்த நடிகை சித்தாரா புதிய சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாக

'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் இணைந்த திரைப்பட பிரபலம்.. தொடங்கும் தேதி அறிவிப்பு..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' என்ற சீரியல் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அடுத்த கட்டமாக இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க உள்ளது. 

தமிழில் ரீமேக் ஆகும் ஆனந்த் தேவரகொண்டாவின் 'பேபி'.. ஹீரோ யார்?

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் ஆனந்த் தேவரகொண்டா நடித்த திரைப்படம் 'பேபி'. கடந்த ஜூலை மாதம் வெளியான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது