கிச்சா சுதீப்பின் பிரமாண்ட 3D திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Thursday,December 09 2021]

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகரான கிச்சா சுதீப் நடித்த பிரமாண்ட திரைப்படமான “விக்ராந்த் ரோணா” என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கிச்சா சுதீப், ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்பட பலர் நடித்துள்ள “விக்ராந்த் ரோணா” என்ற திரைப்படம் 3டி-ல் உருவாக்கப்பட்டு உள்ளது என்பதும் இந்த படம் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த மோஷன் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது

இது குறித்து தயாரிப்பாளர் ஜாக் மஞ்சுநாத் கூறியதாவது: “விக்ராந்த் ரோணா” திரைப்படம் 3-D பதிப்பின் வெளியீட்டு தேதியை அறிவிப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. எங்களின் ரசிகர்கள் ஆரம்பம் முதலே மிகப்பொறுமையாகவும் கனிவுடனும், எங்களிடம் மிகுந்த அன்புடனும் இருந்தார்கள். அவர்களின் உற்சாகம் மற்றும் எதிர்பார்ப்பு மிகவும் தெளிவாக இருந்தது, அது ஒரு தயாரிப்பாளருக்கான வெற்றியில் பாதியை நிறைவேற்றிவிட்டது. அவர்களிடமிருந்து அளவற்ற ஆதரவு கிடைத்ததற்கு, நான் மிகுந்த நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்த படத்தின் மூலம், மர்ம-த்ரில்லர் வகையை ஒரு புதுமையான தளத்தில் மிகப்பெரிய அளவில் அறிமுகப்படுத்தி ரசிகர்களை மகிழ்விக்க விரும்புகிறோம்.


இயக்குநர் அனூப் பண்டாரி கூறியதாவது:.
“விக்ராந்த் ரோணா” திரைப்படம் திரையரங்கு அனுபவத்திற்காகவென்றே உருவாக்கப்பட்டது. இதன் பிரமாண்ட உருவாக்கமும் 3-D பதிப்பு தொழில்நுட்பமும், வெள்ளித்திரையில் அனுபவிக்க வேண்டிய முக்கிய அம்சமாகும். நாங்கள் அறிமுகம் செய்யும், உலகின் புதிய நாயகனை, விரும்பி ஏற்று ரசிக்கும் பார்வையாளர்களைக் கொண்டிருப்பதில் நாங்கள் மிகவும அதிர்ஷ்டசாலிகள். இப்படம் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரையும் கவரும் அட்டகாசமான விருந்தாக இருக்கும். பிப்ரவரி 24, 2022 அன்று உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் காண மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன். விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்.

“விக்ராந்த் ரோணா” திரைப்படம் 14 மொழிகளில், 55 நாடுகளில் வெளியாகவுள்ளது. அனூப் பண்டாரி இயக்கத்தில் அஜனீஷ் லோக்நாத் இசையில் வில்லியம் டேவிட் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.