close
Choose your channels

நடிகர் கிச்சா சுதீப்புக்கு இவ்வளவு பெரிய மகளா? இன்னொரு ஹீரோயின் தயார்..!

Tuesday, May 21, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் மகள் தனது 20 வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கும் நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் வருகிறது. இதனை அடுத்து கன்னட திரையுலகில் இன்னொரு ஹீரோயின் உருவாகிவிட்டார் என்று ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கன்னட திரையுலகின் பிரபல நடிகர் கிச்சா சுதீப், தமிழிலும் சில படங்கள் நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’நான் ஈ’, ‘பாகுபலி’ விஜய் நடித்த ’புலி’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2001ஆம் ஆண்டு கிச்சா சுதீப், பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு 2004 ஆம் ஆண்டு சான்வி என்ற மகள் பிறந்தார். இந்த நிலையில் கிச்சா சுதீப் மகள் இன்று தனது 20வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் ’என்னுடைய இளவரசியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன், பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று மகளுடன் இருக்கும் புகைப்படத்தை கிச்சா சுதீப் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் கன்னட திரை உலகிற்கு இன்னொரு ஹீரோயின் கிடைத்துவிட்டார் என்று கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே கிச்சா சுதீப் மகள் சான்வி சில கன்னட திரைப்படங்களில் சில பாடல்களை பாடி இருக்கும் நிலையில் ஹீரோயின் ஆக அறிமுகம் ஆவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment