விஜய்-அட்லி படத்தில் 'தல' கனெக்சன்

  • IndiaGlitz, [Tuesday,August 07 2018]

தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இம்மாதத்திற்குள் முடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது அட்லி என்று கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை என்றாலும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும், இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் 'தெறி', 'மெர்சல்' படத்திற்கு பின்னர் மீண்டும் விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகும் இந்த படத்தின் நாயகி யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்கள் உள்பட அனைவரிடமும் இருந்தது. இந்த நிலையில் நடிகை கியாரா அத்வானி என்பவர் விஜய்-அட்லி படத்தின் நாயகி என்று கூறப்படுகிறது. இவர் தல தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் தோனியின் மனைவி சாக்சி கேரக்டரில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

ஹன்சிகாவின் 50வது பட டைட்டில் குறித்த அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா, பிரபுதேவா இயக்கிய 'எங்கேயும் காதல்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அருண்விஜய்யின் 'தடம்' சென்சார் தகவல்கள்

தமிழ் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவரான அருண்விஜய், பல ஆண்டுகளாக திரையுலகில் இருந்தாலும் அவருக்கு திருப்பத்தை தந்த படம் அஜித்தின் 'என்னை அறிந்தால்' என்ற படம் தான்.

வருமான வரித்துறை அலுவலகராக மாறிய 'குப்பைத்தொட்டி' இளம்பெண்

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் அசாம் மாநிலத்தில் தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்யும் ஒருவர் குப்பைத்தொட்டியில் ஒரு அழகான பெண் குழந்தை அழுது கொண்டிருந்ததை கண்டார்.

திமுக தலைவர் கருணாநிதி கவலைக்கிடம்: தொண்டர்கள் அதிர்ச்சி

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த பத்து தினங்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக நேற்று வரை தலைவர்கள் கூறிவந்தனர்.

என் படத்தால் கவுதமி பெர்சனலாக பாதிக்கப்பட்டாரா? இயக்குனரின் கேள்வியால் பரபரப்பு

இயக்குனர் வாராகி இயக்கிய 'சிவா மனசில புஷ்பா' என்ற படத்தின் டைட்டில் மாற்றப்பட வேண்டும் என்ரு சென்சார் போர்டு கூறியதை அடுத்து, இயக்குனர் வாராகி ரிவைசிங் கமிட்டிக்கு சென்றார்