ஷங்கர் - ராம்சரண் படத்தின் நாயகி: அதிகாரபூர்வ அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ராம்சரண் தேஜாவுக்கு ஜோடியாக நடிக்க கூடிய நடிகை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.
இந்த படத்தில் நாயகியாக கைரா அத்வானி நடிக்க இருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே தெலுங்கில் பிரபல நடிகையாக இருந்து வரும் கைரா, மகேஷ் பாபுவுடன் ’பாரத் அனு நேனே’ என்ற திரைப்படத்திலும் ராம் சரண் தேஜாவுடன் ’வினய விதேய ராமா’ என்ற திரைப்படத்திலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தெலுங்கில் பிசியாக இருக்கும் கைரா அத்வானி, ஷங்கர் - ராம்சரண் படத்தில் இணைந்து இருப்பது இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஆலியா பட் நடிக்க இருப்பதாகவும், மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியான நிலையில் தற்போது கைரா அத்வானி தான் நாயகி என்று அறிவிக்கப்பட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Joining us on this super exciting journey is the talented and gorgeous @advani_kiara !
— Sri Venkateswara Creations (@SVC_official) July 31, 2021
Welcome on board ❤️#HappyBirthdayKiaraAdvani#RC15 #SVC50@ShankarShanmugh @AlwaysRamCharan @MusicThaman @SVC_official pic.twitter.com/u4RU0Fs2ee
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com