சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் குஷ்பு

  • IndiaGlitz, [Monday,October 24 2016]

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய உடல்நிலை குறித்து அறிய டெல்லி தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை அப்பல்லோ சென்று அங்குள்ள மருத்துவர்களிடமும், அமைச்சர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல நடிகையும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளருமான குஷ்பு இன்று அப்பல்லோ மருத்துவமனை சென்று முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, 'முதல்வர் உடல்நிலை குறித்து அமைச்சர்களிடம் கேட்டறிந்தேன். முதல்வர் விரைவில் பூரண குணமடைந்து, வீடு திரும்பி மக்களுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும்' என்று கூறினார்.