உடல்எடையை குறைத்தது எப்படி? ரகசியத்தை ஷேர் செய்த நடிகை குஷ்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
80கள் தொடங்கி இன்றைக்கு வரைக்கும் இளசுகள் முதல் பெருசு வரை, பலரின் கனவு நாயகியாக இருந்துவருபவர் நடிகை குஷ்பு. நடிகை, அரசியல் தலைவர், சினிமா தயாரிப்பாளர், சீரியல் நடிகை, சின்னத்திரை தொகுப்பாளினி எனப் பல்வேறு அவதாரங்களுடன் தமிழ் சினிமாவில் முக்கியப் பிரபலமாகவும் பல இளம் நடிகர்களுக்கு முன்னோடியாகவும் இருந்துவருகிறார்.
இந்நிலையில் திடீரென்று நடிகை குஷ்பு தனது உடல்எடையை குறைத்து படு ஸ்லிம்மாக காட்சி தருகிறார். இதுகுறித்த புகைப்படங்கள் கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியாவில் வைரலாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வந்தது. இதையடுத்து சில ரசிகர்கள் அன்றைக்கே பிரபு “என்னைக்கும் வயது மூவாறு, என் சொல்லு பலிக்கும் பாரு“ எனப் பாடியதைக் குறிப்பிட்டு காட்டி வருகின்றனர். மேலும் நடிகர் பிரபுவும் சமீபத்தில் தனது எடையைக் குறைத்திருப்பதால் “சின்னத்தம்பி2” திரைப்படம் எடுக்கலாமே! என்பது போன்ற பேச்சுகளும் அடிபடுகின்றன.
அந்த அளவிற்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற நடிகை குஷ்பு, உடல்எடையை குறைத்தது எப்படி என்ற ரகசியத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் நடைப்பயிற்சி ஒன்றுதான் சரியான தீர்வு. அதேபோல உடல்எடையை குறைப்பதற்குச் சரியான வழிமுறையும் நடைப்பயிற்சிதான் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் உடல் எடையைக் குறைப்பது இத்தனை எளிமையா? இதுதெரியாம போச்சே… என்று கமெண்ட் பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் “அண்ணாத்த“ திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை குஷ்பு நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments